23ஆம் புலிகேசி பட பிரச்சனையால் கல்லூரி படத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பை இழந்த Sun Music லிங்கேஷ். அவரே சொன்ன தகவல்.

0
432
- Advertisement -

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றிய எத்தனையோ தொகுப்பாளர்கள் பின்னர் தங்கள் திறமை மூலம் சினிமாவிலும் நுழைந்தனர். பிரஜன்,ரியோ துவங்கி மகேஸ்வரி காஜல் பசுபதி வரை பலர் சன் மியூசிக் மூலம் தான் சினிமாவில் நுழைந்தனர். அந்த வகையில் 90ஸ் ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு தொகுப்பாளராக திகழந்த லிங்கேஷிம் ஒருவர். சன் மியூசிக் பிரைம் டைமில் ஒளிபரப்பான சில இசை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய லிங்கேஷ் பின்னர் சினிமாவிலும் நடிக்கத் துவங்கினார்.

-விளம்பரம்-

இவரது திறமையை கண்டு இவருக்கு பா ரஞ்சித் ‘கபாலி’ படத்தில் ஒரு சிறிய வில்லன் ரோலில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். சிறிய ரோலாக இருந்தாலும் இவர் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இதை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அந்த படத்திலும் இவரது நடிப்பு கவனிக்கப்பட்டு இருந்தது.

- Advertisement -

ஆனால், இவர் பல ஆண்டுக்கு முன்னரே தமன்னாவிற்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை இழந்துள்ளார் என்பது பலர் அறிந்திராத ஒன்று. 2007ம் ஆண்டு வெளிவந்த படம் ‘கல்லூரி’. இந்தப் படத்தை பாலாஜி சக்திவேல் இயக்கி ஷங்கர் தயாரித்திருந்தார். கேடி, வியாபாரி படத்தை தொடர்ந்து தமிழில் தமன்னாவிற்கு இது மூன்றாவது படம். அறிமுக நாயகர்களாக அகில், பரணி ஆகியோர் திரைத்துறையில் அடியெடுத்து வைத்தனர்.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படி ஒரு நிலையில் லிங்கேஷ் மற்றும் தமன்னா இருவரும் கல்லூரி படத்திற்காக எடுத்த சில டிஷ் சூட் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது. மேலும், கல்லூரி படத்தில் லிங்கேஷ் தான் முதலில் ஹீரோவாக நடித்தார் என்றும் 15 நாட்கள் படப்பிடிப்புகள் நடந்த நிலையில் பின்னர் சில பிரச்சனை காரணமாக அவர் என் கல்லூரி படத்தில் விலகி விட்டார் என்றும் செய்திகள் வெளியானது.

-விளம்பரம்-

இது குறித்து விவரத்தை அறிய லிங்கேஷை நாம் தொடர்ந்து கொண்டு பேசினோம். இது குறித்து பேசிய அவர் அந்த படத்தில் நான் கமிட் ஆனது உண்மைதான். ஆனால், படப்பிடிப்பு துவங்கும் முன்னரே அந்த படத்தில் இருந்து நான் நீக்கப்பட்டு விட்டேன் என்று கூறியிருந்தார். இது குறித்து மேலும் விவரமாக பேசிய அவர் ‘சன் மியூசிக்கில் நுழைந்த சில மாதங்களிலேயே எனக்கு கல்லூரி திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நானும் தமன்னாவும் படத்திற்காக டெஸ்ட் ஷூக்களை எல்லாம் கூட முடித்து விட்டோம்.

அந்த சமயத்தில் எங்கள் படத்தை தயாரித்த சங்கர் சாரின் தயாரிப்பு நிறுவனமான S Pictures தான் வடிவேலு சாரை வைத்து 23ஆம் புலிகேசி படத்தை தயாரித்துக் கொண்டிருந்தது. அந்த சமயத்தில் 23ஆம் புலிகேசி படத்திற்கு சில பிரச்சனைகள் வந்ததால் அந்த திரைப்படம் வெளியாக ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது. இதனால் நான் ஹீரோவாக கமிட் ஆன கல்லூரி திரைப்படத்தின் படப்பிடிப்புகள் ஆரம்பிக்காமல் இருந்தது. இதனால் நான் தொடர்ந்து சன் மியூசிக்கில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தேன். ஒரு வருடங்கள் கழித்து படக்குழு என்னை படத்தில் இருந்து நீக்கி விட்டதாக கூறினார்கள். அதற்கான காரணத்தை எதுவும் நான் சொல்ல விரும்பவில்லை. பின்னர் எனக்கு பதிலாக வேறு ஒரு ஹீரோவை போட்டு அந்த படத்தை எடுத்தார்கள் என்று கூறி இருந்தார்.

மேலும், தற்போது தான் நடித்து வரும் படங்கள் குறித்து பேசிய லிங்கேஷ் ‘தற்போது காயல் என்ற படத்தில் நடித்து வருவதாகவும் அதனை தமயந்தி என்ற ஒரு இயக்குனர் இயக்கி வருவதாகவும் கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து நாற்கரப்போர் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதனை ஸ்ரீ வெற்றி என்பவர் இயக்கி வருகிறார். அதை தொடர்ந்து தற்போது காரைக்காலில் ஒரு புதிய படத்தின் படப்பிடிப்புகள் சென்று கொண்டிருக்கிறது. அந்த படத்தில் ஒரு ஐரோப்பிய வெளிநாட்டு பெண் தான் நாயகியாக நடிக்கிறார். பெயரிடப்படாத அந்தப் படத்திற்கு சாண்டி என்ற புதுமுக இசையமைப்பாளர் இசையமைத்திருக்கிறார். மேலும், மூடர் கூடம் டோனி ஜா தா படத்தின் கேமரா மேனாக பணியாற்றி இருக்கிறார். இந்தபடங்கள் குறித்த அறிவிப்புகள் எல்லாம் விரைவில் வரும் என்று மகிழ்ச்சியுடன் கூறியிருந்தார் லிங்கேஷ்

Advertisement