தொலைக்காட்சிகளில் வரும் தொகுப்பாளர்கள் சிலர் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விடுகிறார்கள். அதிலும் குறிப்பாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சன் நியூஸ் தொலைக்காட்சியில் வந்த தொகுப்பாளர்கள் தற்போதும் ரசிகர்கள் மறக்காமல் நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் பிரபல பெண் தொகுப்பாளினியான மகேஸ்வரியும் ஒருவர். மகேஸ்வரி தொகுப்பாளினியாக அறிமுகமானது சன் டிவியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் தான்.
அதன் பின்னர் இசைஅருவி தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார் இடையில் திருமணம் ஆனதால் பிரேக் எடுத்துக்கொண்ட மகேஸ்வரி ஒரு குழந்தைக்கும் தாயானார் அதன் பின்னர் மீண்டும் தொலைக்காட்சியில் பணிபுரிய தொடங்கினார் மேலும் இவர் தாயுமானவன் புதுக்கவிதை போன்ற ஒரு சில சீரியல்களில் கூட நடித்திருக்கிறார்.
மேலும், குயில், மந்திர புன்னகை, சென்னை 28 -2 போன்ற படங்களில் கூட நடித்திருக்கிறார் மகேஸ்வரி.திருமணம் முடிந்து ஒரு குழந்தைக்கு தாயான நிலையில் மகேஸ்வரி தற்போது தன் மகன் மற்றும் தன் தாய்வீட்டாருடன் வசித்து வருகிறார்.தற்போது இன்டெபெண்டண்ட் தாயாக வாழ்ந்து வரும் ஜி தமிழ்’ சேனலில் ‘பேட்டராப்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியை மகேஸ்வரி, தீபக் இருவரும் தொகுத்து வழங்கி வந்தனர்.
சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் மகேஸ்வரி சமீபகாலமாக போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார். இப்படி ஒரு நிலையில் இன்று தனது மகனின் 10வது பிறந்தநாளை கொண்டாடிய மகேஸ்வரி, அவரின் புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.