என் கணவருடன் ஜெயஸ்ரீக்கு தொடர்பு. புதிய குண்டை தூக்கி போட்ட மஹாலக்ஷ்மி.

0
29126
Mahalakshmi
- Advertisement -

பிரபல சன் ம்யூஸிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்த மஹாலக்ஷ்மிக்கும், தேவதையை கண்டேன் தொடரில் ஹீரோவாக நடித்த ஈஸ்வர் என்பவருக்கும் தொடர்பு இருப்பதாக ஈஸ்வரின் மனைவியும் நடிகையுமான ஜெயஸ்ரீ காவல் துறையில் புகார் அளித்திருந்தார். மேலும், விவாகரத்து கேட்டு தன்னை கொடுமை படுத்தியாக ஜெயஸ்ரீ அளித்த புகாரின் பேரில் நடிகர் ஈஸ்வர் மற்றும் அவரது தாயார் இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், மஹாலக்ஷ்மியா இப்படி எல்லாம் செய்துள்ளார் என்று ரசிகர்கள் புலம்பி தள்ளி வருகின்றனர்.

-விளம்பரம்-
Mahalakshmi

மஹாலக்ஷ்மி 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணம் காதல் திருமணம் தான். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு அழகான ஆண் குழந்தையும் இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் மஹாலக்ஷ்மிக்கும் தனது கணவருக்கும் கள்ளத் தொடர்பு இருக்கிறது என்றும் இதனால் தனது கணவர் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் சீரியல் நடிகை ஜெயஸ்ரீ போலீசில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஜெயஸ்ரீ பேசும்போது, தேவதையை கண்டேன் சீரியலில் நடிக்க துவங்கிய பின்னர் இவருக்கும் மகாலட்சுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது.

- Advertisement -

இவர்கள் இருவரின் விஷயம் குறித்து நான் மஹாலக்ஷ்மியிடம் பேச நினைத்து ஒரு நாள் அவருடைய ஷூட்டிங் சபாட்டிற்கு சென்றேன். பின்னர் அவருடைய காரில் இரண்டு மணி நேரம் பேசினோம். ஆனால், அவரோ அப்படி எல்லாம் கிடையாதுமா, எங்களுக்குள் எதுவும் கிடையாது என்று சொன்னால். நான் இதுகுறித்து உன்னிடம் பேசியதை ஈஸ்வரிடம் சொல்லாதே என்று சொல்லிவிட்டு வந்தேன். ஆனால், நான் மஹாலக்ஷ்மியுடன் பேசிய கனத்தில் இருந்து ஈஸ்வருடன் அவர் செல்போனில் தொடர்பில் இருந்துள்ளார். மேலும், நாங்கள் பேசியதை அனைத்தையும் ஈஸ்வர் கேட்டுள்ளார். பின்னர் நான் வீட்டிற்கு சென்றதும், நீ ஏன் மஹாலக்ஷ்மியுடன் போய் பேசினாய் என்று என்னை அடித்து துன்புறுத்தினர் என்று கூறியுள்ளார் ஜெயஸ்ரீ.

mahalakshmi

ஆனால், இதற்கு நேர் மாறாக சமீபத்தில் முதன் முறையாக இதுகுறித்து பேட்டி அளித்துள்ள மஹாலக்ஷ்மி, என்மீது போடும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய். ஈஸ்வர் எனக்கு நல்ல நண்பர் மட்டும் தான், அவரை திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் எல்லாம் எனக்கு இல்லை. நான் எனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெறும் பிரச்சனையில் உள்ளேன், அது எனது சொந்த பிரச்சனை. இப்படி ஈஸ்வர் என்னை தொடர்பு வைத்து பேசும் ஜெயஸ்ரீ, எனது கணவருக்கு நீண்டநாள் தோழியாம். ஆனால், நான் ஏழு வருடம் வாழ்ந்த இந்த வாழ்க்கையில் இந்த விஷயம் இதுவரை எனக்குதெரியவேய தெரியாது.எனக்கும் தெரியாமல் எனது கணவரின் தோழியாக ஜெயஸ்ரீ இருந்துள்ளார், அதை என்ன கூறுவத. மேலும், மஹாலக்ஷ்மி தனது கணவரை விவாகரத்து செய்ய ஏற்கனவே நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார். இதுகுறித்து கேட்ட போது அது என்னுடைய தனிப்பட்ட விஷயம், அவருக்கும் சம்மந்தம் இல்லை என்று கூறிவிட்டார் மஹாலக்ஷ்மி.

-விளம்பரம்-
Advertisement