கணவரை பிரிந்து வாழ்ந்தால் தப்பா.! வருத்தமடைந்த தொகுப்பாளர் மகேஸ்வரி.!

0
5581
maheswari
- Advertisement -

சன் மியூசிக் ஆரம்பமான காலத்தில் இருந்து தற்போது வரை பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக இருந்து வருகிறார் மகேஸ்வரி. ஜி தமிழ்’ சேனலில் ‘பேட்டராப்’ நிகழ்ச்சியை மகேஸ்வரி, தீபக் இருவரும் தொகுத்து வழங்கி வருகிறார்கள். இருவருமே பல வருட தொகுப்பாளர் அனுபவம் கொண்டவர்கள். மகேஸ்வரி தற்போது தன் மகன் மற்றும் தன் தாய்வீட்டாருடன் வசித்து வருகிறார்.

-விளம்பரம்-
Image result for sun music vj maheswari marriage photos

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மகேஸ்வரி பேசியதாவது,
இந்தச் சமுதாயத்துல நமக்குப் பிடிச்ச மாதிரியான வாழ்க்கையை அமைச்சுக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்குங்க. எனக்கு மீடியா மீது ஆர்வம் இருந்ததால, ஆங்கரின், சீரியல் எனப் பிடித்த வேலையைப் பார்த்துட்டு இருக்கேன். ஆனால், ஆரம்பத்தில், ‘மீடியாவுல இருக்கிற பொண்ணை யாரு கல்யாணம் பண்ணிப்பாங்க’னு என் காதுபடவே பேசியிருக்காங்க.

- Advertisement -

அந்தப் பயத்தினாலேயே மீடியாவுக்குள்ள வந்த கொஞ்ச நாள்லயே கல்யாணம் பண்ணி வச்சாங்க. அப்போ அதைப் பற்றியப் புரிதல்கூட என்கிட்ட இல்லை. இருவருக்கும் மனப் பொருத்தம் இல்லை. சில வருடங்களிலேயே பிரிஞ்சுட்டோம். அதுக்கப்புறம் என் பையன நான் தான் பார்த்துட்டு வர. ஒரு நிகழ்ச்சியில் மேடையில் பேசும்போது ‘நான் சிங்கிள் மாம்’னு சொன்னேன்.

மேடையிலிருந்து கீழே இறங்கி வந்ததும் ஒரு பெண், ‘என்ன நீங்க சிங்கிள் மாம்’னு மேடையில பேசுறீங்க. அப்படி உங்க அடையாளத்தை வெளிப்படுத்துறது தப்புனு தோணலயா?’னு கேட்டாங்க. ‘இதுல என்னங்க தப்பு. நான் எப்படி இருக்கிறேனோ அதைப் பெருமையோடு சொல்றேன்.
என்னைப் பெருமைப்பட பேச வேண்டாம். அதே நேரம், இறக்கியும் பேச வேண்டாம். நீங்களே எங்களைப் போன்றவர்களுக்கு சப்போர்ட் செய்யலைனா எப்படி?’னு கேட்டுட்டு கடகடவென நடந்து வந்துட்டேன். 

-விளம்பரம்-
Advertisement