தொகுப்பாளினி நிஷாவின் தற்போதைய நிலை குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் எல்லாம் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறது. அந்த நிகழ்ச்சிகள் மட்டும் இல்லாமல் அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களும் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்கிறார்கள். அந்த வகையில் என்றென்றும் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் தொகுப்பாளினி நிஷா.
இவரை யாரும் மறந்து இருக்க மாட்டார்கள். பிரபல இசையருவி தொலைக்காட்சியில் தொகுப்பாளராக வலம் வந்தவர் நிஷா. இவருடைய குரலை கேட்பதற்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கு. இவர் இசையருவி மட்டும் இல்லாமல் சன் ம்யூசிக் சேனலிலும் தொகுப்பாளினியாக பணியாற்றி இருக்கிறார். அதனை தொடர்ந்து இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் இருக்கிறார்.
நிஷா குறித்த தகவல்:
இருந்தாலும், இவரை பிரபலமாக்கியது இசையருவி நிகழ்ச்சி மூலம் தான். அதே போல் இவர் இசையருவியில் ஒளிபரப்பான வேறொரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்த தொகுப்பாளர் முரளியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். முரளி தொகுப்பாளர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். இவர் சில தொடர்களில் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணத்திற்கு பின் நிஷா:
திருமணத்திற்கு பின் இவர்கள் ஃபோரஸ் (Forus) என்கிற பெயரில் பொட்டீக் ஒன்றை நடத்தி வருகிறார்கள்.
இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். குழந்தை பிறந்த பிறகு நிஷா மீடியாவில் இருந்து விலகி இருக்கிறார். ஏற்கனவே தொகுப்பாளினி நிஷா பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர், நாங்கள் நடத்தும் பொட்டிக் நல்லபடியாக சென்று கொண்டிருக்கிறது. எங்க பொண்ணு ஸ்கூல் சென்று கொண்டிருக்கிறார். நிறைய சீரியல்கள் வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது.
மகள் குறித்து நிஷா சொன்னது:
குழந்தை வளர்ந்த பின்பு ரீ என்றி கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். அன்பான கணவர், தங்கமான பொண்ணு, என்னுடைய அம்மா அப்பா என்று எல்லோருமே எனக்கு துணையாக இருக்கிறார்கள்.
என் மகளை பெரியவளாக்கிவிட்டு தான் மீண்டும் சின்னத்திரைக்குள் என்ட்ரி ஆகுவேன் என்று தன் மகள் குறித்து பெருமையாக பேசி இருந்தார். அதற்குப் பிறகு இவர் தொகுப்பாளர் ஆனந்த கண்ணனின் மறைவிற்கு பேட்டி அளித்திருந்தார்.
நிஷாவின் தற்போதைய நிலை:
அதில் அவர் ஆனந்த் கண்ணன் குறித்து மிகவும் எமோஷனலாக பேசியிருந்தார். மேலும், இவர் மீண்டும் சீரியலில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் எப்போது வந்து என்ட்ரி கொடுப்பார் என தெரியவில்லை. தற்போது நிஷாவை குறித்து பெரிதாக எந்த ஒரு தகவலும் தெரியவில்லை.