சன் ம்யூசிக் என்று சொன்னாலே அனைவருக்கும் நியாபகத்தில் வருவது அஞ்சனா ரங்கன் தான். இவர் தொலைக்காட்சிகளில் வீடியோ ஜாக்கியாக தான் அறிமுகமானர். இன்று வரை ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமாக உள்ளவர் தொகுப்பாளினி அஞ்சனா ரங்கன். இவர் சன் ம்யூசிக் தொலைக்காட்சி ஆரம்பித்த காலத்தில் இருந்து தற்போது வரை பிரபலமான தொகுப்பாளினியாக இருந்து வருகிறார். மேலும், இவர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து உள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்த கயல் படத்தில் நடித்த சந்திரனை கடந்த 2016 ஆம் ஆண்டு தொகுப்பாளினி அஞ்சனா திருமணம் செய்து கொண்டார். அதோடு இவருக்கு ஒரு ஆண் குழந்தை கூட இருகிறது. இதனால் இவர் சில ஆண்டுகள் மீடியாவில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டார். தற்போது 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் தொகுப்பாளினியாக ரி-என்ட்ரி கொடுத்துஇருந்தார்.
ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ஜூனியர் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பங்குபெற்று இருந்தார்.மேலும், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் தொகுப்பாளினி அஞ்சனா ஒருவர். தொகுப்பாளினி அஞ்சனா அவர்கள் அடிக்கடி சமூக வளைத்தளத்தில் தன்னுடைய குடும்ப புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அதே போல அஞ்சனா அடிக்கடி போட்டோ ஷூட் புகைப்படங்களையும் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருவதும் வழக்கம்.
இவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் குவியும். மேலும், இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் 12 லட்சத்திற்கும் மேல் பின்தொடர்ந்து வருகின்றனர். சமீபத்தில் அஞ்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் எடுத்த சில புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார். அதற்கு ரசிகர்கள் சிலர் ஒரு குழந்தைக்கு அம்மாவான பின்னும் இப்படி ஒரு போஸ் தேவையா என்று கேலி செய்து உள்ளனர்