‘ஏன் இப்படி ஜாதி வெறி புடிச்சி அலையுற’-அஞ்சனாவின் பதிவால் கடுப்பான நெட்டிசன்.

0
107085
anjana
- Advertisement -

சன் ம்யூசிக் என்று சொன்னாலே அனைவருக்கும் நியாபகத்தில் வருவது அஞ்சனா ரங்கன் தான். இவர் தொலைக்காட்சிகளில் வீடியோ ஜாக்கியாக தான் அறிமுகமானர். இன்று வரை ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமாக உள்ளவர் தொகுப்பாளினி அஞ்சனா ரங்கன். இவர் சன் ம்யூசிக் தொலைக்காட்சி ஆரம்பித்த காலத்தில் இருந்து தற்போது வரை பிரபலமான தொகுப்பாளினியாக இருந்து வருகிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து உள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்த கயல் படத்தில் நடித்த சந்திரனை கடந்த 2016 ஆம் ஆண்டு தொகுப்பாளினி அஞ்சனா திருமணம் செய்து கொண்டார். அதோடு இவருக்கு சமீபத்தில் தான் ஒரு ஆண் குழந்தை பிறந்து உள்ளது.

- Advertisement -

இதனால் இவர் சில ஆண்டுகள் மீடியாவில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டார். தற்போது 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் தொகுப்பாளினியாக ரி-என்ட்ரி கொடுத்து உள்ளார். ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஜூனியர் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பங்குபெற்று வருகிறார்.சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் அஞ்சனா அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.

இவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் 12 லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகிறார்கள். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மடிசாரில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் ‘மாமி மோட் ஆன்’ என்றும் கேப்ஷன் கொடுத்திருந்தார். இதைக்கண்ட ரசிகர் ஒருவர் ‘ஏன் இப்படி ஜாதி வெறி புடிச்சு அலையுற’ என்று கேட்டிருந்தார். ரசிகரின் இந்த கமெண்டுக்கு பதிலளித்த அஞ்சனா உன்னுடைய கமன்ட்டில்லிருந்தே யாருக்கு ஜாதிவெறி என்பது நன்றாக தெரிகிறது. வாழு, வாழ விடு, அமைதி நிலவட்டும்’ என்று பதிவிட்டிருக்கிறார்

-விளம்பரம்-
Advertisement