தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதன் முறை, ஜெயிலர் படத்தின் ஒரு வார வசூலை அதிகாரப்பூர்வமாக அறிவித்த சன் பிக்சர்ஸ்

0
1982
- Advertisement -

தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதல் வாரத்தில் ரஜினியின் ஜெயிலர் படம் செய்திருக்கும் வசூல் சாதனை குறித்த தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மாஸ் காட்டி இருக்கிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இவர் நடித்த படங்கள் எதுவும் பெரிதாக பேசப்படவில்லை.

-விளம்பரம்-

இதனால் இவர் ஜெயிலர் படத்தில் அதிக கவனம் செலுத்தி நடித்து இருந்தார். அதற்கேற்ப நெல்சனின் முந்தைய படமான விஜயின் வாரிசு படமும் படு தோல்வி அடைந்து இருந்தது. இதனால் நெல்சனும் கதைக்களத்தில் அதிக கவனம் செலுத்தி இருந்தார். மேலும், பல முயற்சிக்கு பின் ரஜினியின் “ஜெயிலர்” படம் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார்.

- Advertisement -

ஜெயிலர் படம்:

படத்தின் ஒவ்வொரும் பாடலும் பட்டைய கிளப்பி இருக்கிறது. மேலும், இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்னன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, வசந்த் ரவி, தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெரப், மோகன் லால், விநாயகம் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து இருக்கிறார்கள். பல எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் கடந்த வாரம் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் ரஜினி அவர்கள் ஓய்வு பெற்ற காவல் அதிகாரியாக ஆரம்பத்தில் அமைதியாக இருந்தாலும் இறுதியில் ஆக்சன் காட்சிகளில் மிரட்டி இருக்கிறார்.

படம் குறித்த தகவல்:

இவர் யோகி பாபு உடன் செய்யும் காமெடியும் பயங்கரமாக ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த படத்திற்கு யூடுயூப் விமர்சகர்களும், பிரபலங்கள், ரசிகர்கள் என எல்லோருமே பாசிட்டிவான கமெண்ட்களை கொடுத்து வருகிறார்கள். இந்த படத்தின் மூலம் நெல்சன் மீண்டும் கம்பேக் கொடுத்து இருக்கிறார். உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் ஜெயிலர் படம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்கு காரணம், இந்த படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் கனகச்சிதமாக இயக்குனர் நெல்சன் தேர்ந்தெடுத்து இருக்கிறார்.

-விளம்பரம்-

படத்தின் வசூல்:

மேலும், இந்த படம் வெளியான முதல் நாளிலேயே பெரிய அளவில் சாதனை படைத்திருக்கிறது. சமீபத்தில் வெளியான விஜயின் வாரிசு, அஜித்தின் துணிவு படங்களின் முதல் நாள் வசூலின் சாதனையை ரஜினியின் ஜெயிலர் படம் முறியடித்து இருக்கிறது. இந்தியா முழுவதும் இந்த படம் 200 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் சுதந்திர தினத்தன்று மட்டும் ஜெயிலர் படம் நாடு முழுவதும் 33 கோடி வசூல் செய்திருக்கிறது. கேரளாவில் இதுவரை 30 கோடி வரை வசூலித்து இருக்கிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் டீவ்ட் :

தமிழகத்தில் மட்டும் 100 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால், இந்த தகவல் எல்லாம் உண்மையா? பொய்யா? என்று தெரியவில்லை. இந்நிலையில் ஜெயிலர் படம் வசூல் குறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் டீவ்ட் ஒன்று போட்டு இருக்கிறது. அதில், ஜெயலலிர் படம் வெளியான ஒரு வாரத்திலேயே உலகம் முழுவதும் 375 கோடி அதிகமான தொகையை வசூலித்து இருக்கிறது. தமிழ் சினிமா வரலாற்றிலேயே இது தான் முதல் வாரத்தில் அதிக வசூல் செய்த படம் என்று கூறி இருக்கிறார்கள். தற்போது இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து ரஜினி ரசிகர்கள் பலரும் உற்சாகத்தில் கொண்டாடி தெறிக்க விட்டு வருகிறார்கள்.

Advertisement