பட்டயை கிளப்பும் வசூல், லாபத்தில் இருந்து காசோலை மட்டுமல்லாமல், சொகுசு காரை Surprise Giftஆக கொடுத்த கலாநிதி மாறன். ரஜினியின் Reaction

0
1091
Rajini
- Advertisement -

ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து லாபத்தில் இருந்து ரஜினிக்கு காசோலை மற்றும் Bmw சொகுசு காரையும் பரிசாக அளித்துள்ளார் கலாநிதி மாறன். தமிழ் சினிமாவில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மாஸ் காட்டி இருக்கிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இவர் நடித்த படங்கள் எதுவும் பெரிதாக பேசப்படவில்லை. இதனால் இவர் ஜெயிலர் படத்தில் அதிக கவனம் செலுத்தி நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

அதற்கேற்ப நெல்சனின் முந்தைய படமான விஜயின் வாரிசு படமும் படு தோல்வி அடைந்து இருந்தது. இதனால் நெல்சனும் கதைக்களத்தில் அதிக கவனம் செலுத்தி இருந்தார். மேலும், பல முயற்சிக்கு பின் ரஜினியின் “ஜெயிலர்” படம் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். படத்தின் ஒவ்வொரும் பாடலும் பட்டைய கிளப்பி இருக்கிறது.

- Advertisement -

ஜெயிலர் படம்:

மேலும், இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்னன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, வசந்த் கிருஷ்னன், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெரப், மோகன் லால், விநாயகம் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து இருக்கிறார்கள். பல எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் கடந்த 10 ஆம் தேதி ஜெயிலர் திரைப்படம் வெளியாகி இருந்தது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த பாடம் வசூலை வாரி குவித்து வருகிறது.

இப்படம் முதல் வார முடிவில் உலகம் முழுவதும் சுமார் ரூ.375.40 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனை தொடர்ந்து இரண்டாவது வார முடிவில் 525 கோடிக்கு மேல் வசூல் செய்துவிட்டதாக மீண்டும் சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஏற்கனவே ரஜினி நடித்த 2.0 திரைப்படம் 500 கோடிக்கு மேல் வசூல் செய்து இருந்தது.

-விளம்பரம்-

அந்த படத்தை தொடர்ந்து தற்போது 500 கோடி வசூலை கடந்த ரஜினி படம் என்ற பெருமையை பெற்றுள்ளது ஜெயிலர் திரைப்படம். இப்படி ஒரு நிலையில் ஜெயிலர் படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனர் கலாநிதி மாறன் நேற்று ரஜினியை நேரில் சந்தித்தார். அப்போது ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்ததோடு ஜெயிலர் படத்தின் மூலம் கிடைத்த ஒரு தொகையை காசோலையாக வழங்கினார்.

மேலும், அந்த காசோலையில் Record maker என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இப்படி ஒரு நிலையில் காசோலை மட்டுமல்லாமல் ரஜினிக்கு BMW X7 என்ற காரை பரிசாக அளித்துள்ளார் கலாநிதி மாறன். இந்த காரின் விலை 1.64 கோடிக்கு மேல் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் கடைசியாக ரஜினியின் அண்ணாத்த படத்தை தயாரித்து இருந்தது. ஆனால், அந்த படம் மாபெரும் தோல்வியை சந்தித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement