விஜய் மற்றும் ஏ ஆர் முருகதாஸ் கூட்டணியில் தயாராகி வரும் ‘சர்கார்’ படத்தின் அப்டேட்டை நீண்ட நாட்களாக வெளியிடாமல் இருந்தது சன் பிக்சர்ஸ் நிறுவனம். கடந்த ஜூன் 22 ஆம் தேதி இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை வெளியிட்ட பிறகு பின்பு எந்த ஒரு தகவலையும் வெளியிடாமல் இருந்தது.இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 25) ‘சர்கார்’ படத்தின் இசை வெளியிட்டு தேதியை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தது சன் பிக்சர்ஸ் நிறுவனம். மேலும், தற்போது விஜய் ரசிகர்களுக்கு அடுத்து ஒரு சிறப்பான அப்டேட்டை அளித்திருந்தது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.
#SarkarWorkingStills pic.twitter.com/Zur1A8iod8
— Sun Pictures (@sunpictures) August 27, 2018
இன்னும் தொடர்ந்து 5 நாட்களுக்கு ‘சர்கார்’ படத்தின் மேக்கிங் புகைப்படங்கள் வெளியிடப்போவதாகவும். தினமும் ஒரு புகைப்படம் என்று தொடர்ந்து 5 நாட்களுக்கு ஒவ்வொரு புகைப்படமாக வெளியிடப்போவதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தது.
இந்த தகவல் விஜய் ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டமாக அமைந்திருந்த நிலையில் சமீபத்தில் ‘சர்கார்’
படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் மற்றும் நடிகர் விஜய் எதோ டிஸ்கசனில் இருப்பது போன்று தெரிகிறது. இதோ அந்த புகைப்படம்.