சிவகார்த்திகேயனின் கடனை அடைத்ததா Sun Pictures ? – உண்மை என்ன ?

0
342
sk
- Advertisement -

சிவகார்த்திகேயனின் மொத்த கடனையும் பிரபல நிறுவனம் ஏற்றுக் கொண்டிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் நுழைந்த குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் படங்கள் இருக்கிறது. சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்து இருந்த டாக்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பையும், அதிக வசூலையும் பெற்றிருந்தது.

-விளம்பரம்-

இதனை தொடர்ந்து அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி இருந்தது. அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இந்த படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தை லைகா தயாரிப்பு நிறுவனத்துடன் சிவகார்த்திகேயன் புராடெக்ஷன் இணைந்து தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் பிரியங்கா அருள்மோகன், சிவாங்கி, எஸ்.ஜே சூர்யா, சமுத்திரக்கனி, ராதாரவி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

- Advertisement -

அயலான் படம்:

மேலும், படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனை தொடர்ந்து இவர் அயலான் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இயக்குனர் ரவிக்குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும், படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த படம் ஏலியன் சம்பந்தப்பட்ட படம் என்றும் ஹாலிவுட் படங்களை மிஞ்சும் படமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.

சிவகார்த்திகேயன் நடிக்கும் படம்:

தற்போது உலக நாயகன் கமலஹாசன் தயாரிப்பில் உருவாகும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருகிறார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவுகள் எல்லாம் வெளியாகி இருந்தது. இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். தற்போது இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது. மேலும், இந்த படத்திற்கு கதாநாயகியாக சாய் பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். அதற்கான புகைப்படம் எல்லாம் வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-

சிவகார்த்திகேயனுக்கு ஏற்பட்ட கடன்:

தற்போது இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது. பின் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் உருவாகி இருக்கும் பிரின்ஸ் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து இருக்கிறார். அந்த படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கி இருக்கிறார். தற்போது இந்த திரைப்படம் வெளியாக தயாராக இருக்கிறது. இந்நிலையில் சிவகார்த்திகேயனின் மொத்த கடனையும் பிரபல நிறுவனம் ஏற்றுக் கொண்ட தகவல் தற்போது வரலாகி விடுகிறது. அதாவது, தன்னுடைய திரைப்படத்தின் மூலம் சிவகார்த்திகேயனுக்கு பல கோடி ரூபாய் கடன் ஏற்பட்டதாகம் செய்திகள் உலா வந்து கொண்டு இருக்கிறது.

பிரபல நிறுவனம் வைத்த கண்டிஷன்:

மேலும் சன் பிக்சர்ஸ் சிவகார்த்திகேயனை தொடர்பு கொண்டு அவருடைய மொத்த கடனையுமே ஏற்றுக் கொண்டு இதற்கு கைமாறாக சிவகார்த்திகேயன் மூன்று திரைப்படங்கள் தொடர்ந்து அவருடைய நிறுவனத்திற்கு நடித்து தர கால்ஷீட் தர வேண்டும் என்று கூறியதாக செய்திகள் சமூக வலைத்தளத்தில் செய்திகள் வைரலாகி வருகிறது. ஆனால், சிவகார்த்திகேயன் தரப்பிடம் இதுகுறித்து விசாரித்ததில் ‘இது உண்மையான தகவல் இல்லை என்றும் தற்போது சிவகார்த்திகேயன் படங்களின் கதைகளை மட்டும் கேட்டு வருவதாகவும் தன்னுடைய அடுத்த படங்களின் தயாரிப்பாளர்கள் யார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் கூறியதாக பிரபல பத்திரிக்கை செய்தி வெளியிட்டு இருக்கிறது.

Advertisement