அன்பே வா சீரியலில் இருந்து வெளியேறிய முக்கிய நடிகை – இனி அவருக்கு பதில் இவர் தான்.

0
5352
anbevaa
- Advertisement -

பொதுவாகவே சீரியல்களில் நடிக்கும் நடிகர்கள் சீரியலில் இருந்து விலகுவதும், வேறு ஒருவர் மாற்றமடைவதும் வழக்கமான ஒன்றாக ஆகி விட்டது. அதிலும் சமீபகாலமாக பல நடிகர்கள் பல்வேறு சீரியல்களில் இருந்து விலகி வருகின்றனர். அந்த வகையில் தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் சீரியலில் இருந்து அக்ஷிதா வெளியேறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகின்றன. சன் டிவி என்று சொன்னாலே போதும் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது சீரியல் தான். சன் தொலைக்காட்சி நிறுவனம் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை சீரியல்கள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் ஒளிபரப்பாகி தற்போது டிஆர்பியில் முக்கிய இடத்தை வகித்து வரும் சீரியல்களில் ஒன்று தான் அன்பே வா.

- Advertisement -

இந்த சீரியலில் வருண், பூமிகா கதாபாத்திரத்தில் ஹீரோ,ஹீரோயின் நடிக்கிறார்கள். இந்த சீரியல் வெளிவந்து சில நாட்களிலேயே மக்கள் மத்தியில் பயங்கர ஹிட் ஆகி விட்டது. அந்த வகையில் அன்பே வா சீரியலில் கதாநாயகிக்கு தங்கை தீபிகா வேடத்தில் நடித்து வருபவர் தான் அக்ஷிதா. இவர் தற்போது இந்த சீரியல் இருந்து வெளியேறி இருக்கிறாராம்.

இவருக்கு பதிலாக புதிதாக ஒரு நடிகையை நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அக்ஷிதா திடீரென்று ஏன் இந்த சீரியலில் இருந்து வெளியேறினார் என்ற தகவல் இன்னும் தெரியவில்லை. அது மட்டுமில்லாமல் அக்ஷிதா அவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக போய் கொண்டிருக்கும் காற்றுக்கென்ன வேலி சீரியலில் கதாநாயகனுக்கு தங்கை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement