ஏன் திடீல்னு முடிச்சிட்டாங்க ? ரசிகர்களின் கேள்விக்கு அழகு சீரியல் நடிகர் பதில்.

0
4610
azhagu
- Advertisement -

கொரோனா பிரச்சனை காரணமாக சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் எல்லாம் ரத்தாகி இருந்தது. இருப்பினும் இடையில் சினிமாவின் போஸ்ட ப்ரொடக்சன் பணிகள் மட்டும் அனுமதிப்பட்டிருந்த நிலையில் சின்னத்திரை தொடர்களை பல கட்டுப்பாடுகளுடன் 60 பேர் மட்டும் நடத்திக்கொள்ளலாம் என்று அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இதனால் சின்னத்திரை ஷூட்டிங் அனைத்தும் துவங்கப்பட்டது.

-விளம்பரம்-

ஆனால், சென்னையில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமானதால் மீண்டும் சின்னத்திரை படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டது. சினிமா ஷூட்டிங் இல்லாததால் தற்போது ரிலீஸ் ஆக இருந்த படங்கள் அனைத்தும் OTTயில் வருகிறது. இப்படி ஒரு நிலையில் ன் தொலைக்காட்சியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அழகு சீரியலில் அதிரடி மாற்றம் ஒன்று நடைபெற்றுள்ளது.

இதையும் பாருங்க : ‘அவனை எப்படி திசை திருப்புவது’ வனிதாவின் முடிவால் மகன் சந்தித்து வரும் பிரச்சனை – மனம் வருந்தியுள்ள வனிதாவின் முதல் கணவர் ஆகாஷ்.

- Advertisement -

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அழகு தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்ற ஒரு தொடராக இருந்து வந்தது இந்த தொடர் கடந்த 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது 700 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் ரேவதி தலைவாசல் விஜய் தென்றல் தொடர்புகள் சுருதி காயத்ரி ஜெயராம் என்று பலர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் அழகு சீரியல் கிளைமேக்ஸ் விரைவில் சன் டிவியில் ஒளிபரப்பாக இருப்பதாகவும், சீரியல் முடிவுக்கு வருவதாகவும் அத்தொடரில் நடித்த அவினாஷ் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். மேலும், இந்த சீரியலின் தனது கடைசி நாள் என்று ஒரு வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார். மேலும், ரசிகர்கள் சிலர் ஏன் அழகு சீரியலை நிறுத்திட்டார்கள் என்று கேட்டதற்கு தெரியவில்லை என்று பதில் அளித்துள்ளார் அவினாஷ்.

-விளம்பரம்-
Advertisement