சீரியல் குழு கொடுத்த வாக்குறுதி.. அழுகு சீரியலில் மீண்டும் இணைந்த சஹானா..

0
3745
sahana

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல் தொடர்கள் தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுவிடுகிறது. அதிலும் சன் தொலைக்காட்சி தான் சீரியல்களின் அரசனாக இருந்து வருகிறது. தொலைக்காட்சி சீரியல்கள் பொறுத்த வரை சன் டிவி தான் இல்லத் தரசிகளின் ஒரே சாய்ஸ். அந்த அளவிற்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் ‘அழகு’ தொடர் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வரும் தொடராக இருந்து வருகிறது.

Image result for alagu serial sahana

இந்த சீரியலில் ரேவதி கதாநாயகியாகவும், இவருடன் தலைவாசல் விஜய், ஸ்ருதி ராஜ், ஐஸ்வர்யா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் அழகு சீரியலில் இருந்து திடீரென சஹானா வெளியேறி உள்ளார். இந்த தொடரில் ரேவதிக்கு மகளாக நடித்து வந்தார். ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்ற சஹானாவின் கதாபாத்திரம் திடீரென்று நீக்கபட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. சமீபத்தில் இந்த சீரியலில் இருந்து விலகியதற்கான காரணத்தை கூறிய சஹானா, முக்கியமான நேரத்தில் ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் முதலில் இயக்குனர்கள் என்னிடம் நடிகை ரேவதிக்கு லீடு கொடுக்கும் கதையில் நடிகை உள்ளீர்கள் என்று சொல்லிதான் கூப்பிட்டார்கள்.

இதையும் பாருங்க : அம்மாவிடம் லாஸ் கேட்ட கேள்வி, சோகத்தில் கவின்.. பாதியில் வெளியேறிய சேரன்..பிக் பாஸ் கொண்டாட்டத்தின் ஹைலைட்ஸ்..

- Advertisement -

மேலும், இந்த தொடரலில் நாலு அண்ணன், தம்பிகளுக்கு ஒரே தங்கச்சி.சொல்லப்போனால் ‘ சின்ன தம்பி’ ,குஷ்பு மாதிரி நீங்க இந்த கதையில் நடிக்க போகிறீர்கள் என்று என்னிடம் கூறினார்கள். அது மட்டும் இல்லாமல் இந்த சீரியலில் உங்கள் கேரக்டருக்கு தான் ரொம்ப முக்கியத்துவம் இருக்குன்னு சொன்னார்கள். அதனாலதான் யாருக்கு இப்படி கிடைக்கும் ஒரு ஜாக்கபாட்னு நினைச்சு சந்தோஷமா நடிக்க ஒத்துக்கிட்டேன். ஆரம்பத்தில் நன்றாக தான் சென்றது. ஆனால், எபிசோடுகள் செல்ல செல்ல என் கேரக்டர் எனக்கே ரொம்ப போரடிக்கிற மாதிரி இருக்கு. மேலும், எனக்கு தெரிந்தவர்களும் ஏன் டல்லா நடிச்சுட்டு இருக்கீங்க, எந்த ஒரு முக்கியத்துவமும் இல்லாத கதாபாத்திரமா போயிட்டு இருக்கு என்று அடிக்கடி கூறுவார்கள். ஒரு கட்டத்தில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல், அதே மாதிரி இருக்கு என்று எனக்கு தோன்றியது. அதனால் அந்த சீரியலில் இருந்து விலகிவிட்டேன் என்று கூறியிருந்தார்.

Image result for alagu serial sahana
Image result for alagu serial sahana

இந்த நிலையில் சஹானா மீண்டும் அழகு சீரியலுக்கு வர இருக்கிறார். இது குறித்து பேட்டி ஒன்றில் பங்கேற்று பேசியுள்ள சஹானா,ஆமாம்,தொலைக்காட்சியில் இருந்து என்னிடம் பேசினார்கள். மேலும், , ‘என்ன நடந்தது என்றுகேட்டார்கள். அவர்களிடம் என்னுடைய வருத்தத்தைச் சொன்னேன். அதை கேட்டுவிட்டு தயாரிப்புத் தரப்பில் இருந்து பேசறதா சொன்னாங்க. பிறகு சீரியல் யூனிட்ல இருந்து பேசி, ‘உங்களுக்கு முக்கியத்துவம் இருக்கற மாதிரி ட்ராக் இருக்கும், அதனால ஷூட்டிங் கிளம்பி வாங்க’னு சொன்னாங்க. ரேவதி மேடம் மாதிரியான சீனியர்கள் நடிக்கிற சீரியல்ல ஒரு சாதாரண கேரக்டர் தான் நான்.ஆனால், என்னுடைய பிரச்னையையும் காது கொடுத்துக் கேட்டதே பெரிய விஷயமில்லையா, அதனாலதான் மறுபடியும் சீரியலுக்குள் வர இருக்கிறேன் என்று கூறியுள்ளார் சஹானா. மீண்டும் சஹானா சீரியலில் என்ட்ரி கொடுப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

-விளம்பரம்-

Advertisement