கல்யாண வீடு சீரியலை ஒளிபரப்ப தடை.! திருமுருகனுக்கே சன் டிவி வைத்த ஆப்பு.!

0
36043
kalyana-veedu

உலகத்தில் பிசினஸ் என்றாலே போட்டி, பொறாமை எல்லாம் வந்துவிடும். அது சிறு தொழிலாக இருந்தாலும் சரி, பெரிய அளவில் தொழில்கள் செய்தாலும் சரி. அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் கல்யாண வீடு சீரியல் யூடியூபில் ஒளிபரப்பு செய்யக்கூடாது என்று சன் டிவி நிறுவனம் தடை போட்டுள்ளது. இதனால் சமூக வலைத்தளங்களில் பல கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன.” தீயா வேலை செய்யணும் குமாரு” என்ற அளவுக்கு பிசினஸ் இருக்கும். அந்த வகையில் பாட்னர்ஸ் கூட எதாவது பிரச்சனைனா அதிலே நம்முடைய நம்பிக்கையும், பலமும் குறைந்து விடும். இதனைத்தொடர்ந்து ‘உன் குத்தமா, என் குத்தமா யாரை நானும் குத்தம் சொல்ல’ என்று திருமுருகனின் நிலைமை இருக்கிறது .சன்டிவி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி மக்களிடையே அதிக வரவேற்பு தந்த மெட்டிஒலி, நாதஸ்வரம் சீரியல்களை இயக்கிய இயக்குனர் திருமுருகன்.

Image result for kalyana veedu

அவர் தங்களது சொந்த தயாரிப்பு நிறுவனமாக திரு பிக்சர்ஸ் மூலம் கல்யாண வீடு என்ற ஒரு புது சீரியலையை சன் டிவியில் ஒளிபரப்பு செய்கிறார்.மேலும் அவர் தயாரிக்கும் எல்லா சீரியல்களிலும் இவர் தான் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த சீரியல் குடும்ப பெண்கள் இடையே அதிக வரவேற்பையும், ஆதரவையும் பெற்று மகத்தான வெற்றியையே நோக்கி சென்று கொண்டிருக்கிறது . மேலும், திரு முருகன் அவர்கள் யூடியுபில் தனியாக “திரு டிவி” என்ற சேனல் ஒன்றை துவங்கியுள்ளார். இது தனது கல்யாண வீடு சீரியலை சன் டிவியில் ஒளிபரப்பாகி ஒரு மணி நேரம் கழித்த பிறகு திரு டிவியில் ஒளிபரப்பாகி வரும். மேலும், அந்த திரு டிவியில் எல்லா எபிசோடுகளையும் எப்போது வேணாலும் பார்த்துக்கொள்ளலாம் என்றும் கூறியிருந்தார். இதனால் டிவியின் வியூவர்ஸ் ஒரு பில்லியனையும் தாண்டி போய்க்கொண்டிருக்கிறது. இதை சன் டிவி நிறுவனம் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

இதையும் பாருங்க : பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன் கவின் வாழ்வில் இப்படி ஒரு சோதனைகள்.! இதுவரை வெளிவராத தகவல்.!

- Advertisement -

இயக்குனர் திருமுருகன் எவ்வளவு பிசினஸ் நாலேஜ் இருந்தால் கூட ‘ பழம் தின்னு கொட்டை போட்ட’ சன் டிவி நிறுவனத்திற்கு எவ்வளவு நாலேஜ் இருக்கும் என்று சொல்லக்கூடிய அளவில் அவர்கள் செயல் இருந்தது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் உங்களுடைய சீரியல் இருந்தாலும் உங்களுடைய சேனலில் ஒளிபரப்பு செய்யக்கூடாது என உத்தரவிட்டார்கள். இனிமேல் யூடியூபில் உங்களுடைய தனி சேனலில் ஒளிபரப்பு செய்தால் சன் டிவியில் சீரியல்கள் ஒளிபரப்பாகது என்று கடுமையாக கூறியுள்ளது. மேலும், கல்யாண வீடு சீரியல் சன் டிவியை விட்டால் சன் நெக்ஸ்ட்டில் மட்டுமே பார்க்க முடியும் என்று தெரிய வந்தது. அந்த அளவிற்கு பிசினஸ் டீல் பேசி முடித்தார்கள் சன் டிவி நிறுவனம்.

https://www.youtube.com/watch?v=4n5bt9DeCmk

இந்த காரணத்தினால்தான் திரு டிவியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கல்யாண வீடு சீரியல் ஒளிபரப்பு செய்ய முடியவில்லை என்றும் திருமுருகன் தெரிவித்திருந்தார்.மேலும், திருமுருகன் அந்த புதிதாக உருவாக்கிய திருடிவி சேனலை அப்படியே நிறுத்தி விடவும் முடியாது.அதனால் எப்படியாவது ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்ற நோக்கில் தினமும் ஒளிபரப்பாகும் சீரியலின் விமர்சனத்தை ஒளிப்பதிவு செய்து எபிசோடின் படங்களை மட்டும் எடுத்து திரு டிவியில் பதிவிட்டு வருகிறார். இதன்மூலம் முடிந்தவரை அவர் வியூவர்ஸை தக்கவைத்து கொள்ளும் நோக்கில் செய்து வருகிறார் என்ற தகவலும் வெளிவந்தது.ஒருவனே முன்னேறவே விட மாட்டாங்களே என்று திருமுருகன் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை இணையங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement