அப்போ சர்கார் வசூலும் பொய்யா.! பேட்ட படத்தால் அசிங்கப்பட்டு வரும் சன் பிக்சர்ஸ்.!

0
880
Sarkar-vs-petta

சூப்பர் ஸ்டார் ரைஜினியின் பேட்ட படம் ஹிட்டா இல்லையா, விஸ்வாசம் படத்தை விட அதிக வசூல் செய்ததா இல்லையா. இந்த விவாதம் தான் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை குறி வைத்து வருகிறது. ஆனால், பேட்ட படம் வசூல் சாதனை செய்ய தவறிவிட்டதை ஏற்க அடம் பிடித்து வருகிறது சன் பிக்சர்ஸ்.

தமிழகத்தில் முதல் நாளில் பேட்ட படத்தை விட விஸ்வாசம் படம் தான் அதிக வசூல் சாதனை செய்திருந்தது. அதே போல பேட்ட படத்தின் தமிழ்நாட்டு வசூல் அஜித்தின் விஸ்வாசத்தை விட குறைவு என பாக்ஸ் ஆபிஸ் ட்ராக்கர்கள் கடந்த சில நாட்களாக கூறி வருகின்றனர்.

- Advertisement -

ஆதனால் பாக்ஸ்ஆபிஸ் ட்ராக்கர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. “இன்னும் எங்களுக்கு 600 திரையரங்கில் இருந்து முழு வசூல் விவரம் வரவில்லை” என குறிப்பிட்டிருந்தனர்.

ஆனால் சர்கார் படம் இரண்டு நாளில் 100 கோடி வசூல் என அதே பாக்ஸ் ஆபிஸ் ட்ராக்கர்கள் பதிவிட்ட போது அதை ஏற்றுக்கொண்டு சன் பிக்சர்ஸ் ட்விட்டரில் ரீட்வீட் செய்தது.சர்கார் வசூல் விவரத்தை ஏற்றுக்கொண்ட சன் பிக்சர்ஸ் பேட்ட வசூல் பற்றி வரும் செய்திகளை எதிர்ப்பது ஏன் என பலரும் சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அப்போ சர்கார் வசூல் சாதனைகளும் பொய்யா என்று சன் பிக்சர்ஸ்ஸை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

-விளம்பரம்-

Advertisement