திடீரென முடிவுக்கு வரும் சன் டிவியின் இனியா சீரியல், இதான் க்ளைமாக்ஸா? வைரலாகும் புகைப்படம்

0
153
- Advertisement -

சன் டிவியின் இனியா சீரியல் முடிவுக்கு வர இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சன் டிவியில் சரிகம புரொடக்ஷன் தயாரிக்கும் இனியா தொடரில் கதாநாயகியாக ஆலியா நடித்து வருகிறார். இந்த சீரியல் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது.
இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முதலில் இந்த சீரியலை வேறொரு இயக்குனர் இயக்கியிருந்தார். தற்போது ஸ்டாலின் என்பவர் இயக்கி வருகிறார்.

-விளம்பரம்-

இந்த சீரியலில் ஆல்யாவுக்கு ஜோடியாக ரிஷி நடித்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் டிஆர்பி ரேட்டிங்கில் இந்த சீரியல் டாப்பில் வந்துவிடும். விக்ரம் போலீசாக இருக்கிறார். சீரியலில் விக்ரம் கொடூரமான போலீஸ்காரராக இருக்கிறார். இனியா எல்லோர் மீதும் அன்பாக இருக்க கூடியவர். எதிர்பாராத சூழ்நிலையால் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆரம்பத்தில் விக்ரமின் செயல்கள் இனியாவிற்கு பிடிக்கவில்லை என்றாலும் தன்னுடைய கணவரை மனதார காதலிக்கிறார்.

- Advertisement -

இனியா சீரியல்:

இனியாவின் குணத்தால் பெண்கள் என்றால் அடிமையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றி அவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று விக்ரம் புரிந்து கொண்டு தன் அம்மா, மனைவி, தங்கை மீது பாசமாக இருக்கிறார். இனியாவின் அக்கா யாழினி விக்ரமின் தம்பியை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். ஆனால், இவர்கள் இருவரும் வந்தது இனியாவின் மாமனருக்கு பிடிக்கவில்லை. எப்படியாவது இவர்களை வீட்டை விட்டு வெளியே துரத்த வேண்டும் என்று பல சதி வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்.

சீரியல் கதை:

இன்னொரு பக்கம் விக்ரமை காதலித்தவர் இனியாவை பழிவாங்க வேண்டும் என்றும் திட்டம் போடுகிறார். இவர்களுக்கு மத்தியில் இனியா-விக்ரம் இருவருமே சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். தற்போது சீரியலில் இனியா கர்ப்பமாக இருக்கிறார். தன்னுடைய அக்காவால் கர்ப்பமாக முடியாது என்பதால் தன்னுடைய குழந்தையை அக்காவிற்கு கொடுக்க இனியா ஒத்துக் கொள்கிறார். ஆனால், யாழினி கர்ப்பமாக இருப்பதாகத்தான் அவருடைய மாமனார் நினைத்துக் கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

சீரியல் ட்ராக்:

பல தில்லாலங்கடி வேலைகளை செய்து இனியாவும், யாழினியும் தப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் இனியாவை அழிக்க ஒரு கும்பல் சுத்தி கொண்டிருக்கின்றது. இதை விக்ரம் கண்டுபிடித்து அவரை காப்பாற்றுகிறார். இப்படி பரபரப்பான கட்டத்துடன் செல்லும் இனியா சீரியலை திடீரென்று முடிவுக்கு வந்திருக்கும் தகவல் தான் தற்போது நேரத்தில் வைரலாகி வருகிறது.

சீரியல் கிளைமாக்ஸ்:

அதாவது, இனியாவுக்கு குழந்தை பிறந்திருக்கிறது. இதனால் மொத்த குடும்பமும் சந்தோஷத்துடன் இனியாவுடன் ஹாஸ்பிடல் இருக்கிறார்கள். இதுதான் இனியா சீரியலின் கிளைமாக்ஸ் காட்சி என்று கூறப்படுகிறது. தற்போது இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் வருத்தத்தில் ஏன்? எதற்கு முடிக்கிறீர்கள்? என்றெல்லாம் கேட்கிறார்கள்.

Advertisement