கண்மணி தொடரில் நடிக்கும் சௌந்தர்யா யாருனு தெரிஞ்சா ஷாக்காகிடுவீங்க.

0
202492
kanmani

தொலைக்காட்சி சீரியல் என்று சொன்னாலே அனைவருக்கும் நியாபகம் வருவது சன் டிவி சேனல் தான். ஏன்னா,சீரியல் என்ற ஒன்னு ஆரம்பித்ததே சன் நிறுவனம் தான். மேலும், பல ஆண்டுகளாகவே சன் டிவியில் ஒளிபரப்பாகு சீரியல்கள் எல்லாமே ‘செம மாஸ்’ காட்டி வருகிறது என்று கூட சொல்லலாம். அது மட்டும் இல்லைங்க சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் பல குடும்ப தாய்மார்களிடையே அதிக வரவேற்பை பெற்று வெற்றி தொடர்களாக போய்க்கொண்டு உள்ளது. அந்த வகையில் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘கண்மணி’ சீரியல் மக்களிடையே நல்ல ஆதரவை பெற்று வருகிறது. இந்த கண்மணி சீரியலில் சௌந்தர்யா கதாபாத்திரத்தில் நடிக்கும் லீஷா எக்லர்ஸ் என்பவர் பற்றி பல சுவாரசியமான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக வருகின்றது.

Image result for kanmani serial

இதனைத்தொடர்ந்து கண்மணி சீரியலில் கதாநாயகியாக உள்ள லீஷா எக்லர்ஸ் அவர்கள் சினிமா உலகில் நடிகையாக கூட வலம் வந்து கொண்டு இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் தமிழில் இவ்வளவு திரைப்படங்கள் நடித்துள்ளாரா! என்ற வியப்பிலும், ஏன்? இவ்வளவு படம் நடித்தும் மக்கள் மத்தியில் அறிமுகம் ஆகவில்லை என பல கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர் ரசிகர்கள். சரி வாங்க நம்ப சௌந்தர்யாவை பத்தி பாக்கலாம்… சன் டிவியில் இரவு 8.30 மணி அளவில் ஒளிபரப்பாகும் சீரியல் தான் ‘கண்மணி’ சீரியல். இதில் சஞ்சீவ் அவர்கள் ஹீரோவாக நடிக்கிறார். நம்ம சஞ்சீவ் பத்தி சொல்லவா வேண்டும். சஞ்சீவ் சீரியலில் ஒரு மாஸ் ஹீரோ என்பது நமக்கு தெரிந்தது தானே.

- Advertisement -

மேலும்,இந்த சீரியலில் சஞ்சீவ் (கண்ணன்) கதாபாத்திரத்திலும், லீஷா எக்லர்ஸ் (சௌந்தர்யா) கதாபாத்திரத்திலும் நடித்து கொண்டிருக்கிறார். இதனைத்தொடர்ந்து இந்த சீரியலில் ஆரம்பத்தில் இரண்டு கதாநாயகிகள் இருந்தார்கள். பின் கண்ணன் கதாபாத்திரத்துக்கு ஜோடி யார்? யார்? என பல கேள்வி எழுப்பி ரசிகர்கள் குழம்பிப் போயிருந்தார்கள். ஆனால், தற்போது தான் அந்த குழப்பத்திற்கு தீர்வு வந்துள்ளது. ஆமாங்க, சஞ்சீவ் என்கிற கண்ணனுக்கு ஜோடியாக நம்ம சௌந்தர்யா தான் நடிக்கிறாங்க. நடிகை லீஷா எக்லர்ஸ் ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டு இருந்தாலும் இவர் 1993ம் ஆண்டு சென்னையில் தான் பிறந்தார். அதுமட்டுமில்லாமல் இவர் சென்னையிலுள்ள எத்திராஜ் கல்லூரியில் தன்னுடைய படிப்பை படித்து முடித்தார். எல்லாரும் படித்து முடித்து செய்வதுபோல லீஷாவும் மாடலிங் செய்ய தொடங்கினார்.

Image result for kanmani serial soundarya husband

லீஷா மாடலிங் செய்ய தொடங்கியவுடன் சினிமா துறையில் இருந்து பட வாய்ப்புகள் நிறைய வந்தன. ஆனால், அவர் முதலில் படத்தில் நடிக்க விருப்பமில்லை என கூறியிருந்தார். பின்னர், என்ன நினைத்தாரோ? தெரியவில்லை படங்களில் நடிக்கத் தொடங்கினார். லீஷா எக்லர்ஸ் அவர்கள் எம்.சசிகுமார் தயாரிப்பில்,பி.சோலை பிரகாஷ் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த ‘பலே வெள்ளைய தேவா’என்ற படத்தின் மூலம் தான் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். மேலும், இவர் இந்த படத்தில் சப்போர்ட்டிங் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் பொது நலன் கருதி, திருப்புமுனை, சிரிக்க விடலாமா, பிரியமுடன் பிரியா, மைடியர் லிசா, மடை திறந்து போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

இப்படி திரைப்படங்களில் இவ்வளவு படம் நடித்தும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆகவில்லை என்ற சோகம் ஒரு பக்கம் இருந்தாலும், சின்னத்திரையில் ஒளிபரப்பான ஒரே தொடரில் இந்த அளவிற்கு ஹிட் ஆகிவிட்டார். மேலும், இவர் திரைப் படங்களில் தொடர்ச்சியாக நடித்துக்கொண்டு வந்திருந்தாலும் சீரியலில் சஞ்சீவ் ஜோடியாக நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். அதோடு இவர் இந்த வருடம் நடித்துள்ள ஒரு சில படங்கள் கூடிய விரைவில் வெளிவர உள்ளது என்ற தகவலும் வந்துள்ளது.

Advertisement