90ஸ் கிட்ஸ் மறக்க முடியாத Vj மோனிகாவா இது ? தன் மகனுடன் பிரபல நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படம் இதோ.

0
295
monica
- Advertisement -

‘சன் செய்திகளுக்காக உங்கள் மோனிகா’ என்ற இவரது குரலை கண்டிப்பாக நாம் மறந்திருக்க மாட்டோம். வானிலை செய்தி வாசிப்பாளர்களில் பிரபலமானவர் மோனிகா. வானிலை செய்திக்குப் பிறகு இவர் சினிமா, சீரியல் என பிஸியாக நடித்து வந்தார். பின் சோசியல் மீடியா பக்கம் வந்தவுடன் இவர் சீரியல், சினிமா பக்கம் ஆளையே காணோம். சோசியல் மீடியாவில் சமூக பிரச்சனை, அரசியல் என பல விஷயங்கள் குறித்து தைரியமாக பேசி வீடியோக்கள் வெளியிட தொடங்கினார். இவர் வெளியிட்ட வீடியோவின் மூலம் இவருடைய செய்தி வாசிப்பாளர் வேலைக்கு பிரச்சினை வந்தது.

-விளம்பரம்-
மோனிகா கணவருடன்

இதனால் மோனிகா வேலையை உதறி விட்டார். அதுமட்டுமில்லாமல் சமீப காலமாக சோசியல் மீடியாவில் இவருடைய வீடியோக்களும் குறைய தொடங்கியது. இருப்பினும் தொடர்ந்து தன்னுடைய யூடுயூப் சேனலில் பல்வேரு சமூக பிரச்சனைகள் குறித்து வீடியோகளை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் கூட ஜெய் பீம் படம் குறித்து இவர் சூர்யாவிற்கு ஆதரவாக வீடியோ வெளியிட்டு இருந்தார்.

- Advertisement -

அந்த வீடியோவிற்கு கீழ் கூட இவருக்கு ஏகப்பட்ட மிரட்டல்கள் ஆனாலும் அதை பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வருகிறார். செய்தி வாசிப்பாளராக ஆக வேண்டும் என்பது தான் இவரது கனவு. ஆனால், இவருக்கு கிடைத்ததோ இரண்டு நிமிடங்கள் வரும் வானிலை அறிக்கை தான்.

ஆனால், அந்த இரண்டு நிமிட வீடியோ மூலம் ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்தார் மோனிகா. இவரது கணவர் ”செவன் மைல்ஸ் பெர் செகண்ட்’ என்கிற பொலிட்டிகள் பிராண்டிங் கம்பெனி நடத்தி வருகிறார். Lkg படத்தில் பிரியா ஆனந்த் செய்யும் அதே வேலை தான். மேலும், இவருக்கு ஒரு மகனும் இருக்கிறார். சமீபத்தில் இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் மாம் நிகழ்ச்சியில் தன் மகனுடன் கலந்துகொண்டு இருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement