என்னுடைய மகனை வைத்து எனக்கு மிரட்டல் விடுத்தார்கள். ஷாக் கொடுத்த சன் டிவி மோனிகா.

0
41933
mounika
- Advertisement -

வானிலை செய்தி வாசிப்பாளர்களில் பிரபலமானவர் மோனிகா. வானிலை செய்திக்குப் பிறகு இவர் சினிமா, சீரியல் என பிஸியாக நடித்து வந்தார். பின் சோசியல் மீடியா பக்கம் வந்தவுடன் இவர் சீரியல், சினிமா பக்கம் ஆளையே காணோம். சோசியல் மீடியாவில் சமூக பிரச்சனை, அரசியல் என பல விஷயங்கள் குறித்து தைரியமாக பேசி வீடியோக்கள் வெளியிட தொடங்கினார். இவர் வெளியிட்ட வீடியோவின் மூலம் இவருடைய செய்தி வாசிப்பாளர் வேலைக்கு பிரச்சினை வந்தது. இதனால் மோனிகா வேலையை உதறி விட்டார். அதுமட்டுமில்லாமல் சமீப காலமாக சோசியல் மீடியாவில் இவருடைய வீடியோக்களும் குறைய தொடங்கியது. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது அவர் கூறியது,

-விளம்பரம்-
மோனிகா

- Advertisement -

நான் திருமணத்திற்கு பிறகு கொஞ்ச நாள் மீடியாவில் இருந்து ஒதுங்கி இருந்தேன். ஆனாலும், சீரியல், சினிமா வாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருந்தது. ஆனால், நான் மனதுக்கு பிடித்த கதாபாத்திரங்களில் மட்டும் நடித்துக் கொண்டிருந்தேன். இடையில் தான் எனக்கு ஒரு விபத்து ஏற்பட்டது. அதனால் சீரியலில் நடிக்க முடியாமல் போனது. சோசியல் மீடியா வீடியோ என்பது என்னுடைய தனிப்பட்ட விருப்பம். நான் எந்த ஒரு அரசியல் கட்சியில் உறுப்பினராக கிடையாது. அது மட்டுமில்லாமல் ஆளுங்கட்சி, எதிர்கட்சி என்று நான் வித்தியாசம் பார்க்காமல் என் மனதுக்கு சரி என்று தோன்றும் விஷயங்களை தான் பேசிக் கொண்டிருக்கிறேன். அப்படி வெளியான சில வீடியோக்களில் எனக்கு வேறு மாதிரியான பிரச்சனைகள் ஏற்பட்டது. நான் வீடியோவில் பேசின விஷயங்கள் எல்லாம் நியாயமாக இருக்கா? இல்லையா? என்று பார்க்காமல், நான் பேசவே கூடாது என்று சிலர் நினைக்கிறார்கள்.

இதையும் பாருங்க : தயவுசெஞ்சு குடும்ப பெண் மாதிரி போட்டோ போடுங்க. கீர்த்தி சுரேஷுக்கு அட்வைஸ் செய்த ரசிகர்.

-விளம்பரம்-

இதனால் என்னுடைய குடும்பத்தை தீவிரமாக கண்காணித்து வந்தார்கள். என் மகன் ஸ்கூலை கண்டுபிடித்து அவனை ஃபோட்டோ எடுத்து வெளியிட்டார்கள். உண்மைய சொல்லனும் என்றால் என்னுடைய மகனை வைத்து எனக்கு மிரட்டல் விடுத்தார்கள். அந்த சமயத்தில் என் கணவரும் வேலை சம்பந்தமாக வெளிநாடு சென்றிருந்தார். எந்த பிரச்சினையும் வேண்டாம் என்று என் வீட்டில் உள்ள அனைவரும் கேட்டுக்கொண்டதால் கொஞ்ச நாள் நான் மீடியாவில் இருந்து விலகி இருந்தேன். மற்றபடி யாருக்கும் பயந்து நான் இதை செய்யவில்லை. அப்படி இருந்தும் அப்பப்ப வீடியோக்களில் பேசிக் கொண்டுதான் இருந்தேன். வேலூர் மக்களவை தேர்தலில் அதிமுக ஜெயிக்க வேண்டியது. அந்த நேரத்தில் ஒரு எம்.பியின் முத்தலாக் பற்றிய பேச்சு கட்சி தோற்றுப் போய்விட்டது.

மோனிகா கணவருடன்

மீண்டும் நான் சோசியல் மீடியாவில் வீடியோக்களை வெளியிட தொடங்கினேன். இதற்கிடையில் என்னுடைய கணவர் ஒரு முக்கியமான பணியில் இறங்கி இருக்கிறார். அவருக்கு உதவலாம் என்று நினைத்து தான் சீரியல், சினிமா பக்கம் என்னால் நடிக்க முடியாமல் போனது. என்னுடைய கணவர் அரசியல் தொடர்பான வேலையை செய்து கொண்டு வருகின்றார். பிரசாந்த் கிஷோர் பற்றி அனைவரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர் பண்ற பொலிடிகல் பிராண்டிங் ஃபீல்டுலில் தான் என்னுடைய கணவரும் இருக்கிறார். இரண்டு மூன்று தேர்தல்களை சந்தித்து விட்டார். 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் தமிழ்நாட்டில் எல்லா பிரதான கட்சிகளுமே இவர் மாதிரியான ஆட்கள் தேவைப்படுகிறார்கள். அந்த வேலைகளை தான் இப்போது என் கணவர் தொடங்கி இருக்கிறார். ஒரு மனைவியா இந்த வேளையில் அவருக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்ய முடிவு செய்திருக்கிறேன் என்கிறார் மோனிகா.

Advertisement