லிவிங்ஸ்டன் மகளை தொடர்ந்து பூவே உனக்காக சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்த கதிர் – அவரே வெளியிட்ட காரணம்.

0
3602
poove
- Advertisement -

பூவே உனக்காக தொடரில் இருந்து விலகியதாக அந்த சீரியலின் நாயகன் அருண் தெரிவித்து இருப்பது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் டிவியை போல சன் தொலைக்காட்சியிலும் சினிமா டைட்டில்களை கொண்ட பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. வானத்தை போல. பூவே உனக்காக, ரோஜா என்று சினிமா டைட்டிலில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் பூவே உனக்காக சீரியல் சன் டிவியின் வெற்றிகரமான சீரியல்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.

-விளம்பரம்-

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கப்பட்ட இந்த சீரியல் வெற்றிகரமாக 250 எபிசோடுக்கு மேல் கடந்து இருக்கிறது. இந்த சீரியலில் கதிர் என்ற கதாபாத்திரத்தில் இந்த சீரியலின் நாயகனாக நடித்து வருகிறார் சீரியல் நடிகர் அருண் நடித்து வந்தார். இப்படி ஒரு நிலையில் இந்த சீரியலில் இருந்து விலகிவிட்டதாக அவரே தனது சமூக வலைதளத்தில் தெரிவித்து இருக்கிறார்.

இதையும் பாருங்க : கேசுவலா ட்ரெஸ் போட்டு பீச்சுக்கு போலாம்னு கணவர் கேட்டாரு – நீச்சல் உடையில் புகைப்படம் வெளியிட்ட ஸ்ரேயா.

- Advertisement -

இதுகுறித்து தெரிவித்துள்ள அவர், பூவே உனக்காக சீரியலில் இருந்து நான் விலகி இருப்பதை உங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். என்னை இனி கதிராக உங்களால் என்னை பார்க்க முடியாது. இப்படி ஒரு வாய்ப்பைக் கொடுத்த என்னுடைய தயாரிப்பாளருக்கும் சன் டிவிக்கும் நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தொடர்ந்து எனக்கு அன்பும் ஆதரவும் கொடுத்து வந்த ரசிகர்களுக்கு நன்றி. விரைவில் உங்களுக்கு ஒரு நல்ல செய்தியுடன் சந்திப்பேன். உங்களின் அன்பும் ஆதரவும் எப்போதும் எனக்கு தேவை என்றும் உங்கள் அன்புடன் அருண் என்று பதிவிட்டுள்ளார்.

தற்போது இவருக்கு பதில் யார் ஹீரோவாக நடிக்கப் போகிறார் என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது. இந்த சீரியலில் இரண்டு நாயகிகள் நடித்து வந்தனர் அதில் ஒரு நாயகியாக பிரபல நடிகர் லிவிங்ஸ்ட்டன் மகள் ஜோவிகா நடித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் ஜோவிகா இந்த சீரியலில் இருந்து விலகினார். இதுகுறித்து தெரிவித்து இருந்த அவர், தனது உயர் கல்வி படிப்பை தொடருவதற்காக இந்த சீரியலில் இருந்து விலகுவதாக கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement