வடிவேலுவுடன் இருக்கும் இந்த சன் டிவி சீரியல் நடிகை யார் தெரியுமா ? அதுவும் இந்த பிரபல நடிகரின் மகள்.

0
2238
jovika
- Advertisement -

தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவானாக திகழ்ந்து வருபவர் நடிகர் வடிவேலு. என் ராசாவின் மனசிலே தொடங்கி இவர் பல ஹிட் படங்கள் கொடுத்துள்ளார் காமெடியில். அனால் இடியில் இவருக்கு ஏற்பட்ட பிரச்சனையால் இவர் படங்களில் நடிப்பதில்லை என்றாலும் இவரது புகைப்படமும் மீம்மும் சமூகவலைத்தளத்தில் அடிக்கடி வந்து கொண்டு தான் உள்ளது. இப்படி ஒரு நிலையில் நடிகர் வடிவேலு சிறுமியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று நமது கண்ணில் பட்டது. வடிவேலுடன் இருக்கும் அந்த சிறுமி வேறு யாரும் இல்லை, தமிழில் பிரபல நடிகரான லிவிங்ஸ்ட்டனின் மகள் தான்.

-விளம்பரம்-

தமிழ் சினிமா உலகில் 80 மற்றும் 90 காலகட்டங்களில் பிரபலமான நடிகர்களில் இருந்தவர் நடிகர் லிவிங்ஸ்டன். இவர் 1982 ஆம் ஆண்டு டார்லிங் டார்லிங் என்ற படத்தில் ஒரு ஸ்டேஷன் மாஸ்டராக நடித்து இருந்தார். அதோடு அந்த படத்தின் உதவி இயக்குனராகவும் லிவிங்ஸ்டன் பணியாற்றி இருந்தார். இவர் திரைப்பட நடிகர் மட்டும் இல்லாமல் திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றி உள்ளார். இவர் 1988 ஆம் ஆண்டு வெளிவந்த பூந்தோட்ட காவல்காரன் திரைப்படத்தின் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

- Advertisement -

1996 ஆம் ஆண்டு வெளிவந்த சுந்தரப் புருசன் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து இருந்தார். பின் தொடர்ந்து இவர் கேப்டன் பிரபாகரன், உழைப்பாளி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார்.நடிகர் லிவிங்ஸ்டன் அவர்கள் ஜசின்தா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஜோவிதா மற்றும் ஜமீனா என இரண்டு பெண்கள் வாரிசுகள் உள்ளனர்.நடிகர் லிவிங்ஸ்டன் அவர்கள் தன்னுடைய மூத்த மகள் சினிமா உலகிற்கு வரப் போகிறார் என்று இரண்டு வருடங்களுக்கு முன்னரே பேட்டியில் கூறி இருந்தார். ஜோவிதா ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க போகிறார் என்றும் அந்த படத்தில் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை அம்பிகாவின் மகன் ராம் கேசவ் லிவிங்ஸ்டன் மகளுக்கு ஜோடியாக நடிக்கஇருந்தார்.

This image has an empty alt attribute; its file name is image-17.png

இந்த படத்தின் பெயர் கலாசல். மேலும், இந்த படத்தில் ராதாரவி, அம்பிகா, மதன் பாப், பானுசந்தர் என பலர்நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால், அந்த படம் என்ன ஆனது என்று தெரியவில்லை. தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக தொடரில் நடித்து வருகிறார். இந்த தொடர் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement