திடீரென சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியலை முடிக்க இருக்கும் காரணம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அந்த வகையில் 2020 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட தொடர் தான் ‘வானத்தைப்போல’. இந்த தொடர் அண்ணன்– தங்கை பாசத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கதை.
சீரியலில் அண்ணன் சின்ராசு மீது பாசத்தைப் பொழியும் தங்கையாக துளசி இருக்கிறார். இந்த தொடரில் முதலில் கதாநாயகியாக துளசி ரோலில் ஸ்வேதா நடித்து இருந்தார். சின்ராசு ரோலில் தமன் நடித்து இருந்தார். பின் துளசி கதாபாத்திரத்தில் நடித்த ஸ்வேதா சீரியலில் இருந்து விலக அவருக்கு பதில் நடிகை மன்யா ஆனந்த் நடித்து வருகிறார். அதன் பின் சின்ராசுவாக நடித்து வந்த தமனும் விலக அவருக்கு பதிலாக சீரியலில் நடிகர் ஸ்ரீகுமார் நடிக்கிறார்.
வானத்தைப்போல சீரியல்:
இவர்களை தொடர்ந்து வானத்தைப்போல சீரியலில் இருந்து பல நடிகர்கள் விலகி இருந்தார்கள். இருந்தாலும், சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. சமீப காலமாக இந்த சீரியலில் பரபரப்பான திருப்பங்களுடன் செல்வதால் டிஆர்பியிலும் முன்னிலை வகுத்து வருகிறது. மேலும் சேனலில் பிரைம் டைமில் அதிக ரேட்டிங் பெற்ற தொடர்களில் இதுவும் ஒன்று. அதுமட்டுமில்லாமல் இதுவரை இந்த தொடர் ஆயிரம் எபிசோடுகளை கடந்து இருக்கிறது.
முடிய போகும் சீரியல்:
இந்த நிலையில் வானத்தை போல சீரியல் திடீரென முடிக்க இருக்கும் தகவல் தான் தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது, சீரியல் முடிய போகும் தகவல் பலருக்கும் வருத்தத்தை கொடுத்தாலும், ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் என்று சொல்லலாம். திடீரென்று ஒரு பிரபல சீரியலை முடிப்பதற்கு என்ன காரணம்? என்றெல்லாம் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக சீரியலுக்கு சம்பந்தப்பட்டவர்கள் கூறியிருப்பது, எங்களில் பலருக்கும் இப்படி ஒரு செய்தியை கேட்ட போது அதிர்ச்சியாகத் தான் இருந்தது.
சீரியல் தரப்பில் சொன்னது :
நிஜமா, பொய்யா என்பது எங்களுக்கு தெரியவில்லை. இயக்குனர் கடைசி எபிசோட் ஷெட்டில் சொன்னபோது தான் நிஜம் என்று எங்களுக்கு புரிந்தது. இதை கேட்டு சில ஆர்டிஸ்ட்கள் அழவே ஆரம்பித்து விட்டார்கள். அடுத்தடுத்து புதிய சீரியல்கள் வர இருப்பதால் ரொம்ப நாளாக ஒளிபரப்பாகி இருக்கும் சீரியல்களை முடிக்கலாம் என்று சேனல் தரப்பில் முடிவு செய்திருக்கிறார்கள். அதனால் தான் இந்த தொடர் மட்டும் இல்லாமல் இன்னும் சில தொடர்களையும் சீக்கிரமாகவே முடிக்க இருக்கிறார்கள்.
சீரியல் முடிய காரணம் :
அதோடு டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலையில் இருக்கும் ஒரு தொடரை எப்படி முடிக்க நினைப்பார்கள்? என்ற கேள்வி எங்கள் யூனிட் எல்லோருக்குமே இருக்கிறது. சீரியலின் ஆரம்பத்தில் முக்கியமான கதாபாத்திர நடிகர்கள் விலகியது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தாலும் அவர்கள் அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்து மக்கள் மத்தியில் இடம் பிடித்தார்கள். அதற்குப் பின் திடீரென்று தயாரிப்பு தரப்புக்கும், சில நடிகர்களுக்கும் சின்ன சின்ன மனஸ்தாபம், குழப்பங்கள் வந்தது. அதனால் சீரியலை 500 எபிசோடில் முடித்து விடலாம் என்று சேனல் முடிவு செய்திருந்தது. இருந்தாலுமே இந்த சீரியல் ஆயிரம் எபிசோடுகளை கடந்து டிஆர்பி யில் நல்ல இடத்தை பிடித்திருக்கிறது. ஆனால், இந்த சீரியல் முடிவடைவதற்கு முழுக்க முழுக்க காரணம் புது சீரியல்கள் வருவதால் தான் என்று கூறியிருக்கிறார்கள்.
Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.