அப்பாவுக்கு விபத்து, ஒரு வேலை உணவு – தங்கைகளுக்காக பட்ட கஷ்டம். ரோஜா சீரியல் நடிகையின் தங்கை இவங்க தான்.

0
1473
roja
- Advertisement -

சன் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் சீரியலில் டாப் சீரியல் என்றால் அது ரோஜா சீரியல் தான். இந்த சீரியலில் நாயகியாக நடித்து வருபவர் பிரியங்கா நல்காரி. தெலுங்கு திரையுலகில் 2010-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் ‘அந்தாரி பந்துவையா’. இந்த படத்தினை பிரபல இயக்குநர் சந்திரா சித்தார்த்தா இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக ஷர்வானந்த் நடித்திருந்தார்.அவருக்கு ஜோடியாக பத்ம ப்ரியா நடித்திருந்தார். இப்படத்தில் மிக முக்கிய ரோலில் நடிகை பிரியங்கா நல்காரி நடித்திருந்தார். இது தான் நடிகை பிரியங்கா நல்காரி அறிமுகமான முதல் தெலுங்கு திரைப்படம்.

-விளம்பரம்-
              வீடியோவில் 12 நிமிடத்தில் பார்க்கவும் 

இதனைத் தொடர்ந்து தெலுங்கில் திலீப்பின் ‘நா சாமி ரங்கா’, ராமின் ‘ ஹைப்பர்’, ராணா டகுபதியின் ‘நேனே ராஜு நேனே மந்திரி’ என அடுத்தடுத்து சில படங்களில் நடித்தார் நடிகை பிரியங்கா நல்காரி. அதன் பிறகு ஈ டிவியில் ஒளிபரப்பான ‘மேகமாலா’ மற்றும் ஜெமினி டிவியில் ஒளிபரப்பான ‘ஸ்ரவனா சமீராலு’ ஆகிய இரண்டு சீரியல்களிலும் நடித்தார் நடிகை பிரியங்கா நல்காரி.

இதையும் பாருங்க : உங்க மேனேஜர கால் பண்ண சொல்லுங்க, என் படத்துல உங்களுக்கு வாய்ப்பு தர – வடிவேலுக்கு மீரா மிதுன் கொடுத்த ஆபர் (காலக் கொடும இதெல்லாம்)

- Advertisement -

2019-ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த திரைப்படம் ‘காஞ்சனா 3’. பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ் இந்த படத்தினை இயக்கி, நடித்திருந்தார். இதில் முக்கிய வேடத்தில் பிரியங்கா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது என்னவோ ரோஜா சீரியல் தான். இந்த சீரியல் மூலம் பிரியங்காவிற்கான ரசிகர் பட்டாளம் அதிகமாகியிருக்கிறது.

இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பிரியங்கா, தனது சிறு வயதில் பட்ட கஷ்டங்களை பகிர்ந்துள்ளார். என்னுடைய ஹேண்ட் பேக்கில் எப்போதும் பிஸ்கட் பொட்டலம் போல் இருக்கும் யாரும் பசியால் இருப்பதை நான் விரும்ப மாட்டேன். ஏனென்றால் சிறுவயதில் நான் பல நாட்கள் சாப்பிடாமல் இருக்கிறேன். சிறுவயதில் எனக்கு நிறைய பிரச்சினைகள் இருந்தது. அப்பாவுக்கு விபத்து ஏற்பட்டு காலில் அடிபட்டு விட்டது. அம்மா ஒரு ஹவுஸ் வைஃப் மூன்று சகோதரிகள். ஒரு நாள் வீட்டில் சாப்பாடு இருக்கும் ஒரு நாள் இருக்காது. நாங்கள் விறகு அடுப்பில் கூட சமைத்து சாப்பிட்டு இருக்கிறோம் என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் இவரது தங்கையின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement