உங்க மேனேஜர கால் பண்ண சொல்லுங்க, என் படத்துல உங்களுக்கு வாய்ப்பு தர – வடிவேலுக்கு மீரா மிதுன் கொடுத்த ஆபர் (காலக் கொடும இதெல்லாம்)

0
5683
vadivelu
- Advertisement -

சமூக வலைதளத்தில் கடந்த சில வாரமாக மிகவும் சர்ச்சைக்குரிய நபராக இருந்து வந்தவர் மாடலும் நடிகையுமான மீராமிதுன். மாடல் அழகியான இவர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்னவோ விஜய் தொலைக்காட்சியில் சென்ற ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.நிகழ்ச்சியில் இருந்தபோது சேரன் தன்னை தவறான இடத்தில் பிடித்து தள்ளி விட்டார் என்று இவர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும்இவர் டுவிட்டரில் அடிக்கடி சரியான விஷயங்களை பதிவிட்டு வந்தார். அதிலும் கடந்த சில வாரமாக ஹோலிவுட்டு மாபியா என்ற பெயரில் சூர்யா மற்றும் விஜய் குறித்து அவதூறாக பேசி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார் மீரா.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் வடிவேலு குறித்து நடிகை மீரா மிதுன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவானாக திகழ்ந்து வந்த நடிகர் வடிவேலு, கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமாவில் நடிக்கத் தடையை பெற்று இருக்கிறார். இதனால் இவரை சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் காண முடியவில்லை. இப்படி ஒரு நிலையில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வடிவேலு பல்வேறு சினிமா பிரபலங்களுடன் எடுத்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது. இந்த சந்திப்பில் வடிவேலுவின் வருகை தான் ஹைலைட். கொஞ்சம் மெலிந்து காணப்பட்ட வடிவேலு நண்பர்கள் மத்தியில் மனம் திறந்து பேசி இருந்தார்.

- Advertisement -

சிவாஜி கணேசன் நடித்த கர்ணனின் ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ என்ற உன்னதமான தமிழ் பாடலை இவர்கள் இருவரும் இணைந்து பாடினர். அப்போது வடிவேலு சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா என்ற வரியை பாடும் போது தன்னை கை காண்பித்து கொண்டார் வடிவேலு. மேலும், இந்த பாடலை படைகொணடே இருக்கும் போதே கண்கள் கலங்கி சில நிமிடங்கள் பாடுவதையே நிறுத்தியிருக்கிறார். அவர் கலங்கியதைக் கண்டு, மற்றவர்களும் கலங்க, சுதாரித்துக் கொண்டு, ‘உங்களுக்கெல்லாம் ஒரு வருஷம்தான் லாக்டௌன்; நான் பத்து வருஷமாவே லாக்டௌன்லதானே இருக்கேன்’ 

“நான் என்ன தப்பு செஞ்சேன்? மக்கள் என் பேச்சை ரசிக்கிறாங்கனு கூப்பிட்டாங்க, போனேன். அதன்பிறகு அந்தப் பக்கம் இந்தப் பக்கம்னு ரெண்டு தரப்புலயுமே என்னை ஒதுக்கிட்டாங்க. உடம்புல தெம்பு இருக்கு, ஆனா ஒருத்தரும் கூப்பிடலையே. நடிக்க ஆசை இருக்கு, உடல்ல தெம்பும் இருக்கு. ஆனா ஒருத்தரும் கூப்பிடாம வீட்டுல அடைஞ்சு கிடக்கிறது எவ்வளவு பெரிய ரணமா இருக்கு தெரியுமா என்று மற்றவர்களிடம் மனம் நொந்து பேசினார் என்று ‘நண்பேன்டா’ வாட்ஸ்அப் குழுவை சேர்ந்தவர்கள் கூறி இருந்தார்கள்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் நடிகை மீரா மிதுன், வடிவேலு குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் உங்கள் தெனாலி ராமன் படத்தை பார்த்தேன். நீங்கள் திறமையான மனிதர், நீங்கள் காலங்கக் கூடாது. உங்களுக்கு பட வாய்ப்பு வேண்டுமானால் நான் தருகிறேன். நான் நிறைய படங்களில் நடித்து வருகிறேன். உங்களுக்கு விருப்பம் என்றால் என்னை அழையுங்கள் நான் பட வாய்ப்பு தருகிறேன்.

Advertisement