அழகு சீரியலை தொடர்ந்து, ரோஜா சீரியல் முடிவடையப் போகிறதா ? விவரம் இதோ.

0
3268
- Advertisement -

கொரோனா பிரச்சனை காரணமாக சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் எல்லாம் ரத்தாகி இருந்தது. இருப்பினும் இடையில் சினிமாவின் போஸ்ட ப்ரொடக்சன் பணிகள் மட்டும் அனுமதிப்பட்டிருந்த நிலையில் சின்னத்திரை தொடர்களை பல கட்டுப்பாடுகளுடன் 60 பேர் மட்டும் நடத்திக்கொள்ளலாம் என்று அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இதனால் சின்னத்திரை ஷூட்டிங் அனைத்தும் துவங்கப்பட்டது.

-விளம்பரம்-
Top 5 Tamil Serials): டாப் 5 ரேட்டிங்கில் இடம் பிடித்த சீரியல்கள் இதுதான்!  நம்பர் ஒன் சீரியல் எது தெரியுமா?| Top 5 Tamil Serials List

சினிமா ஷூட்டிங் இல்லாததால் தற்போது ரிலீஸ் ஆக இருந்த படங்கள் அனைத்தும் OTTயில் வருகிறது. இப்படி ஒரு நிலையில் ன் தொலைக்காட்சியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அழகு சீரியல் திடீரென்று நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.இதனை அழகு சீரியலில் நடித்தது வந்த நடிகை சுருதி கூட தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு தெரிவித்திருந்தார்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் சன் டிவியில் பிரைம் டைமில் ஒளிப்பரப்பாகி வரும் ரோஜா சீரியலும் நிறுத்தபடுவதாக சமூக வலைதளத்தில் ஒரு செய்தி வைரலானது. சன் தொலைக்காட்சியில் எத்தனையோ தொடர்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் இப்போது டிரெண்டிங்கில் போய்க்கொண்டிருக்கும் சீரியலில் ரோஜா சீரியல் தான் பட்டையை கிளப்புகிறது. இந்த நிலையில் இந்த சீரியல் நிறுத்தப்பட உள்ளதாக செய்திகள் வெளியானது.

இப்படி ஒரு நிலையில் ரோஜா சீரியலில் நடித்து வரும் பிரியங்கா இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும், இதற்கு ஒரு வீடியோ ஒன்றையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பிரியங்கா, , யார் சொன்னது. ரோஜா சீரியல் முடிவடையப் போகிறது என்பதெல்லாம் வதந்தி. அதை எல்லாம் கண்டுகொள்ள வேண்டாம். வரப்போகும் எபிசோட்கள் நிறைய திருப்பங்கள் இருக்கும். உங்களுக்கு மிகவும் பிடிக்கும்படி இருக்கும்” என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement