அஜித்தின் நெருங்கிய நண்பர் எந்த சீரியல் நடிகரா.! இதுவரை அஜித்திடம் நடிக்க வாய்ப்பு கேட்டதே இல்லையாம்.!

0
716

அல்டிமேட் ஸ்டார் அஜித் தமிழ் சினிமாவில் ஒரு உச்ச நட்சத்திரமாக இருந்து வருகிறார். இவருடன் இணைந்து நடித்துவிட மாட்டோமா என்று பலரும் ஏங்கி வருகின்றனர். இந்நிலையில் அஜித்தின் நண்பராக இருந்தாலும் அவரிடம் வாய்ப்பு கேட்டு சென்றதில்லை என்று கூறியுள்ளார் பிரபல சீரியல் நடிகர்.

Image result for tamil serial dev anand

சன் டிவியில் ஒளிபரப்பான பல்வேறு பிரபலமான தொடர்களில் நடித்தவர் சீரியல் நடிகர் தேவ் ஆனந்த். இவர், அஜித்தின் நெருங்கிய நண்பர் என்பது பலரும் அறிந்திராத ஒன்று. இவர், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கோலங்கள் தொடரின் மூலம் தொலைக்காட்சியில் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். அதன் பின்னர் பல்வேறு தொடர்களிலும் நடித்து வருகிறார்.

இதையும் பாருங்க : இந்திக்கு சென்றதும் பார்ட்டி கிளப் என்று ஆரம்பித்த கீர்த்தி சுரேஷ்.! இவங்களுமா.!

- Advertisement -

இவர் வள்ளி ,தெய்வம் தந்த வீடு, பிரியமானவள் ,வம்சம் போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார். மேலும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நிகழ்ச்சியிலும் பங்கு பெற்றுள்ளார். தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா என்ற தொடரில் வில்லனாக நடித்து வருகிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்று இவர் அஜித் குறித்து பேசியுள்ளார்.

Image result for tamil serial dev anand

அவர் கூறியதாவது அஜித்தும் நானும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். நாங்கள் இருவரும் சந்தித்துக் கொண்டால் பெரும்பாலும் இவை பற்றி தான் பேசுவோம். இதுவரை நான் அவரிடம் சினிமாவில் வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்பதே கிடையாது. அதுதான் எங்கள் நட்பு இன்றுவரை தொடர்வதற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது என்று கூறியுள்ளார் தேவ் ஆனந்த்.

-விளம்பரம்-
Advertisement