உடன் நடித்த நடிகரையே இரண்டாம் திருமணம் முடித்த சன் டிவி சீரியல் நடிகை – இதோ புகைப்படங்கள்.

0
741
- Advertisement -

விமர்சனங்களை கடந்து தன் காதலனை சின்னத்திரை சீரியல் நடிகை நிவேதிதா கரம் பிடித்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக சின்னத்திரை, வெள்ளி வெள்ளித்திரை பிரபலங்கள் தங்களுடன் ஜோடியாக நடித்தவர்களையே திருமணம் செய்வதை ட்ரெண்டிங்காக வைத்திருக்கிறார்கள். அதிலும் சமீப காலமாகவே சின்னத்திரை பிரபலங்கள் பலர் திருமணம் செய்து இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

அந்த வகையில் மிர்ச்சி செந்தில்- ஸ்ரீஜா, சேத்தன்- தேவதர்ஷினி, ஆலியா மானசா- சஞ்சீவ், சித்து- ஸ்ரேயா, மதன்- ரேஷ்மா, ஆர்யன்- ஷபானா போன்ற பல பேர் சேர்ந்து நடித்து காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். சமீபத்தில் கூட விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீ நான் காதல் என்ற தொடரில் ஹீரோவாக நடிக்கும் பிரேம் ஜேக்கப் நடிகை சுவாசிகாவை திருமணம் செய்து கொண்டார். அந்த வரிசையில் தற்போது மீண்டும் ஒரு சின்னத்திரை காதல் ஜோடி இணைந்து இருக்கிறது.

- Advertisement -

நிவேதிதா குறித்த தகவல்:

அவர்கள் வேறு யாரும் இல்லை நிவேதிதா-சுரேந்தர். சன் டிவி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் நிவேதிதா. இதற்கு ராதிகா நடித்த வாணி ராணி, கல்யாண பரிசு, திருமகள், சுந்தரி போன்ற பல சீரியல்களில் நடித்திருக்கிறார். பின் இவர் மகராசி என்ற சீரியலில் நடித்திருந்தார். அப்போது இவருடன் நடித்த நடிகர் ஆர்யன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறு காரணமாக பிரிந்து விட்டார்கள்.

நிவேதிதா -சுரேந்தர் காதல்:

மேலும், இவர்களுக்கு விவாகரத்து ஆகி மூன்று வருடங்களும் ஆகிவிட்டது. தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மலர் என்ற தொடரில் நடித்து வருகிறார். மேலும், இந்த தொடரில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருப்பவர் சுரேந்தர். இந்த சீரியல் மூலம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் ப்ரீ வெட்டிங்க்காக நிவேதிதா- சுரேந்தர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வந்தது.

-விளம்பரம்-

நிவேதிதா பதிவு:

இது குறித்து பலருமே கேள்வி கேட்டும், நிவேதித்தாவை விமர்சித்தும் இருந்தார்கள். அதற்கு நிவேதிதா, ஆமா நாங்கள் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம். எனக்கு விவாகரத்து ஆகி மூன்று வருடம் ஆனது உண்மைதான். தற்போது எனக்கு புது காதல் கிடைத்திருக்கிறது. இனி நான் ஸ்பெஷலான ஒருவரிடம் வாழப்போகிறேன். புரிந்துகொண்டு மதிப்பளியுங்கள். மோசமான கேள்விகள் எல்லாம் கேட்க வேண்டாம். வாழவிடுங்கள் என்று பதிலடி கொடுத்திருந்தார்.

சுரேந்தர்- நிவேதிதா திருமணம்:

இந்த நிலையில் இன்று சுரேந்தர்- நிவேதிதா திருமணம் நடைபெற்று இருக்கிறது. இந்த திருமணத்தில் இரு வீட்டாரின் குடும்பத்தினரும், நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டிருந்தார்கள். அது மட்டும் இல்லாமல் சின்னத்திரை பிரபலங்கள் சிலரும் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திருந்தார்கள். தற்போது இவர்களுடைய திருமண புகைப்படம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்து பலரும், சுரேந்தர்- நிவேதிதா ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து புகைப்படத்திற்கு லைக்ஸ் குவித்தும் வருகிறார்கள்.

Advertisement