கௌதமை வெளுத்து வாங்கிய கயல், மூர்த்தியை அசிங்கப்படுத்திய ராஜலக்ஷ்மி- விறுவிறுப்பில் கயல்

0
324
- Advertisement -

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் டிஆர்பியில் டாப்பில் இருப்பது கயல். தன் குடும்பத்திற்காக போராடும் ஒரு பெண்ணின் கதையை மையமாக கொண்டு கயல் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. சீரியலில் கடின உழைப்பாளியான ஹீரோயின் கயல் தன்னுடைய மொத்த குடும்பத்தையும் காப்பாற்றி வருகிறார். கடந்த சில மாதங்களாக கயல் சீரியலில் எழிலின் திருமண ட்ராக் தான் சென்று கொண்டு இருக்கிறது. எழில் சிறு வயதில் இருந்தே கயலை காதலித்து வருகிறார்.

-விளம்பரம்-

கயல் எழிலை நண்பராக தான் பார்க்கிறார். பின் எப்படியோ எழில் தன்னுடைய காதலை கயலிடம் சொல்கிறார். ஆனால், கயல் குடும்ப சூழ்நிலைக்காக எழிலை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று மறுத்தார். பின்பு ஒரு கட்டத்தில் கயலுக்கு எழில் மீது காதல் ஏற்படுகின்றது. இருந்தாலும், கயல் அதை சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். பின் எழிலுக்கு ஆர்த்தியை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தார்கள். ஆனால், அந்த திருமணத்தில் எழிலுக்கு விருப்பம் இல்லை. கடைசியில் அந்த திருமணம் நின்றது.

- Advertisement -

கயல் சீரியல்:

மேலும், ஆர்த்திக்கு எழிலின் நண்பர் ஆனந்த் தாலி காட்டி விட்டார். இதற்கு பலருமே அதிர்ச்சியாகி இருந்தார்கள். பின் எழிலை காதலிப்பதை கயல் ஒத்துக்கொள்கிறார். இருவருமே காதலிக்கிறார்கள். ஆனால், எழிலின் அம்மாவிற்கு கயலை பிடிக்கவில்லை. இருந்தாலுமே, எழில், கயலை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று உறுதியாக இருக்கிறார். அதோடு கயல்- எழில் திருமண வேலைகளும் சிறப்பாக கோலாகலமாக நடந்தது. ஆனால், கயலின் அம்மாவிற்கு விஷம் கொடுத்ததால் திருமணம் தடைபட்டது.

கயல்- எழில் திருமணம் :

அதற்கு பின் கயல் உடைய அம்மா குணமாகி வந்துவிட்டார். இருந்தாலுமே கயல்- எழில் இருவரும் காதலித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தற்போது மீண்டும் கயல்-எழில் திருமணத்தின் உடைய ட்ராக் தான் சென்று கொண்டிருக்கின்றது. அந்த வகையில் இந்த வார எபிசோடில் பத்திரிக்கை வைக்க கயலின் அண்ணன் மூர்த்தி எழிலுடைய வீட்டிற்கு சென்றிருந்தார். அங்கு ராஜலட்சுமியும், அவருடைய மகன் எல்லோருமே மூர்த்தியை ரொம்ப அவமானமாக பேசி இருந்தார்கள். இருந்தாலுமே மூர்த்தி பொறுமையாக தான் இருந்தார்.

-விளம்பரம்-

இந்த வாரம் எபிசோட் :

ஒரு கட்டத்தில் ராஜலட்சுமி மகன் கல்யாண பத்திரிகையை கிழித்து போட பார்த்தார். உடனே கோபம் வந்து மூர்த்தி அவனை அடித்து பத்திரிக்கையை பிடுங்கிக் கொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜலட்சுமி மூர்த்தியை அடிக்க சென்று கேவலமாக பேசி அனுப்பி விட்டார். இன்னொரு பக்கம் ஹாஸ்பிடலில் கயல் தன்னுடைய குடும்பத்தை நினைத்து ரொம்பவே வேதனையாக இருக்கிறார். இதை பார்த்த டீன், நீ முன்பு போல் சரியாக வேலை செய்வதில்லை என்று பயங்கரமாக திட்டுகிறார். கயலும் மன்னிப்பு கேட்கிறார். அப்போது வில்லன் கௌதம், கயலை முறைத்து பார்த்து நிற்கிறார்.

கயல் சீரியல் :

எப்படியாவது கயலை பழிவாங்க வேண்டும் என்று காத்துக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் கயல் வேறு ஒரு திருமணம் செய்தாலும் அவரை அடைந்தே தீர வேண்டும் என்ற எண்ணத்தில் கௌதம் இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் கயல், இன்னும் ஒரு மாதத்திற்குள் உன்னுடைய முகத்திரையை கிழிப்பேன் என்று சவால் விடுகிறார். கௌதம் சிரித்து கொண்டே முடிந்தால் செய் என்று சொல்கிறார். அதற்குப் பின் வீட்டில் கயல், ராஜலட்சுமி வீட்டில் உங்களை அவமானப்படுத்தினார்களா? என்று மூர்த்தியிடம் கேட்க அவர் எதுவும் சொல்லாமல் அமைதியாக நிற்கிறார். இனி வரும் கயல்-எழில் திருமணம் நடக்குமா? ராஜலக்ஷ்மி என்ன செய்ய போகிறார் என்ற விறுவிறுப்பில் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

Advertisement