அழகு சீரியலை தொடர்ந்து 3 சீரியல்களை அதிரடியாக நிறுத்திய சன் டிவி – காரணம் இது தானாம்.

0
3019
azhagu
- Advertisement -

கொரோனா பிரச்சனை காரணமாக சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் எல்லாம் ரத்தாகி இருந்தது. இருப்பினும் இடையில் சினிமாவின் போஸ்ட ப்ரொடக்சன் பணிகள் மட்டும் அனுமதிப்பட்டிருந்த நிலையில் சின்னத்திரை தொடர்களை பல கட்டுப்பாடுகளுடன் 60 பேர் மட்டும் நடத்திக்கொள்ளலாம் என்று அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இதனால் சின்னத்திரை ஷூட்டிங் அனைத்தும் துவங்கப்பட்டது.

-விளம்பரம்-
Kalyana Parisu Serial in Sun TV, Cast and Crew

ஆனால், சென்னையில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமானதால் மீண்டும் சின்னத்திரை படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டது. சினிமா ஷூட்டிங் இல்லாததால் தற்போது ரிலீஸ் ஆக இருந்த படங்கள் அனைத்தும் OTTயில் வருகிறது. இப்படி ஒரு நிலையில் ன் தொலைக்காட்சியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அழகு சீரியல் திடீரென்று நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதையும் பாருங்க : நிஜமாகவே இவருக்கு 15 வயது தானா. அனிகாவின் போட்டோ ஷூட்டை கண்டு வாயடைத்து போன ரசிகர்கள்.

- Advertisement -

இதனை அழகு சீரியலில் நடித்தது வந்த நடிகை சுருதி கூட தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு தெரிவித்திருந்தார். இப்படி ஒரு நிலையில் ‘அழகு’ சீரியலை தொடர்ந்து சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ‘கல்யாணப் பரிசு’, ‘தமிழ்ச்செல்வி’, ‘சாக்லேட்’ உள்ளிட்ட சீரியல்கள் இனி ஒளிபரப்பப் போவதில்லை என தயாரிப்பு நிறுவனம் முடிவெடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனால் சன் டிவியின் சீரியல் ரசிகர்கள் கொஞ்சம் ஷாக்கடைந்து உள்ளனர்.  சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ‘அழகு’, ‘கல்யாணப் பரிசு’, ‘தமிழ்ச்செல்வி’, ‘சாக்லேட்’ ஆகிய 4 சீரியல்களையும் ஒரே நிறுவனமே தயாரித்து வந்தது. அந்த சீரியல்களில் நடித்து வந்த பலர் ஷூட்டிங் வர இயலாத காரணத்தால் கதாபாத்திர மாற்றமும் செய்யப்பட்டது. அதுவும் சரிவரப் பொருந்தவில்லை. இதனால் தயாரிப்பு நிறுவனமும், சேனலும் ஒருங்கிணைந்து தற்போது இந்த சீரியல்களை நிறுத்துவது என தெரிவிக்கப்ட்டுள்ளது.

-விளம்பரம்-
Advertisement