சுந்தரி சீரியலில் நடித்து வரும் நடிகை நிஜத்தில் இப்படி ஒரு மாடர்ன் பேர்வழியா. நீங்களே பாருங்க இத.

0
16156
sundari
- Advertisement -

கடந்த ஆண்டு தடை செய்யப்பட்ட டிக் டாக் மூலம் எண்ணெற்ற நபர்களுக்கு சினிமாவிலும் நுழைந்து இருக்கின்றனர். மேலும், டிக் டாக் மூலம் பலர் சின்னத்திரையில் கூட நுழைந்து இருக்கிறார்கள், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சத்யா சீரியல் ஆயீஷா கூட டிக் டாக் மூலம் பிரபலமடைந்து பின்னர் சின்னத்திரையில் நுழைந்தவர் தான். அவ்வளவு ஏன் தற்போது விஜய் தொலைக்காட்சியில் பட்டையை கிளப்பி கொண்டு இருக்கும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்றுள்ள சக்தி கூட டிக் டாக் மூலம் பிரபலமடைந்தவர் தான்.

-விளம்பரம்-

அந்த வகையில் டிக் டாக்கில் இருந்து சின்னத்திரைக்கு கால் பதித்துள்ளார் கேப்ரில்லா. விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஒளிபரப்பாகி வந்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக பலருக்கும் பரிட்சயமானவர் கேப்ரில்லா. அந்த நிகழ்ச்சியை விட கடந்த சில மாதத்திற்கு முன்னர் பொல்லாசியில் நடைபெற்ற பாலியல் குற்றச்சாட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

- Advertisement -

அந்த வீடியோவில் பெண் கதறிய குரலை கேப்ரில்லா டிக் டாக் செய்திருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் விமர்சிக்கப்பட்டு வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியாகியிருந்த ஐரா படத்திலும் நடித்திருந்தார். கடந்த சில மாதங்களுக்கு தனது நீண்ட நாள் காதலரான ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

ஐரா படத்திற்கு பின்னர் இவர் ‘செத்தும் ஆயிரம் பொன்’ என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படி ஒரு நிலையில் இவர் சன் தொலைக்காட்சியில் சமீபத்தில் துவங்கி ஒளிபரப்பாகி வரும் ‘சுந்தரி’ என்ற தொடரில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு போட்டியாக துவங்கப்பட்டது என்றும் கூறப்பட்டு வருகிறது. சுந்தரி சீரியலில் கிராமத்து கெட்டப்பில் இருக்கும் இவர் நிஜத்தில் படு கிளாமர் பேர் வழியாக இருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement