கூடிய விரைவில் சுனைனாவுக்கு திருமணமா? அவரே சொன்ன உறுதியான தகவல்

0
55
- Advertisement -

கூடிய விரைவில் நடிகை சுனைனாவுக்கு திருமணம் செய்ய இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக இருப்பவர் சுனைனா. தமிழில் நடிகர் நகுல் நடிப்பில் கடந்த 2008ம் ஆண்டு வெளியான காதலில் விழுந்தேன் என்ற படம் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார் சுனைனா. இதனை தொடர்ந்து இவர் மாசிலாமணி, வம்சம், சமர், யாதுமாகி, தெறி, காளி, என்னை நோக்கி பாயும் தோட்டா போன்ற பல்வேறு படங்களில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் , கன்னடம் என பல மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். ஆனால், இவரால் முன்னணி நடிகையாக சினிமாவில் வலம் வர முடியவில்லை. பின் இயக்குநர் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் வெளிவந்த “சில்லுக் கருப்பட்டி” என்ற படத்தில் சுனைனா வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அவருடைய கதாபாத்திரத்தை பார்த்து பலரும் பாராட்டி இருந்தார்கள்.

- Advertisement -

சுனைனா திரைப்பயணம்:

அதை தொடர்ந்து இவர் ட்ரிப் படத்தில் நடித்து இருந்தார். ஆனால், அந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றியடையவில்லை. பின் இவர் எரியும் கண்ணாடி, விஷாலின் லத்தி, ரெஜினா போன்ற படங்களில் நடித்து இருந்தார். ஆனால், இந்த படங்கள் எதுவும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியடையவில்லை. மேலும் இவர் படங்களில் மட்டும் இல்லாமல் வெப்சீரிஸ்களிலும் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.

சுனைனா புகைப்படம்:

அந்த வகையில் சமீபத்தில் இன்ஸ்பெக்டர் ரிஷி என்ற வெப்சீரிஸில் சுனைனா நடித்திருந்தார். இந்த வெப் சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இப்படி இருக்கும் நிலையில் சில தினங்களுக்கு முன்பு சுனைனா இன்ஸ்டாவில் போட்டிருந்த புகைப்படம் தான் சோசியல் மீடியாவில் சலசலப்பு ஏற்படுத்தியிருக்கிறது.

-விளம்பரம்-

சுனைனா பதிவு:

அதாவது, அந்த புகைப்படத்தில் சுனைனா ஒருவருடன் கைகோர்த்து இருக்கிறார். இதை பார்த்து பலருமே உங்களுக்கு திருமணமா? உங்களுடைய காதலன் யார்? என்றெல்லாம் கேள்வி கேட்டிருக்கிறார்கள். இந்நிலையில் தற்போது இது தொடர்பாக சுனைனா பதிவு போட்டிருக்கிறார். அதில் அவர், எனக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துவிட்டது.

சுனைனா நிச்சயதார்த்தம்:

நாங்கள் மோதிரம் மாத்திக் கொண்டோம். கூடிய விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது. அதை விரைவில் தெரிவிப்போம். எனக்கு வாழ்த்து சொல்லிய அனைவருக்குமே நன்றி. என்னுடைய நிச்சயதார்த்தம் சந்தோஷமாகவும் சிறப்பாகவும் எளிமையாகவும் முடிவடைந்தது என்று கூறியிருக்கிறார். தற்போது இவரின் பதிவை பார்த்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement