அந்த காமெடிக்கு முதல்ல சிரிப்பே வரல, அப்புறம் அவர் டப்பிங் பண்ணதுக்கு அப்புறம் தான் செம சிரிப்பு – பேக்கரி காமெடி குறித்து சுந்தர் சி.

0
876
giri
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக சுந்தர்.சி திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமில்லாமல் மிக சிறந்த நடிகரும் ஆவார். இவர் இயக்கத்தில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருந்தன. இவருடைய இயக்கத்தில் வெளிவந்த முறைமாமன், உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், லண்டன், வின்னர், உன்னை தேடி, மேட்டுக்குடி, கலகலப்பு போன்ற பல காமெடி படங்கள் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது. அந்த வகையில் சுந்தர் சி இயக்கத்தில் அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த கிரி படமும் ஒன்று.

-விளம்பரம்-
undefined

இந்த படத்தில் வடிவேலு தன் அக்காவை வைத்து பேக்கரி வாங்கியிருக்கும் காமெடி காட்சி இன்றும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு தான் இருக்கிறது. இந்தக் காட்சி எடுத்த அனுபவத்தை குறித்து சமீபத்தில் சுந்தர் சி அவர்கள் பேட்டியில் பகிர்ந்துகொண்டார். அதில் அவர் கூறியது, கிரி படத்தில் பேக்கரி காமெடி காட்சிகள் எல்லோருக்கும் தெரியும். காலையில் எழுந்த உடனே ஒருவர் கதவை தட்டி உன் அக்காவை வைத்துதான் பேக்கரி வாங்கனியாமே என்ற காட்சி ஷூட் பண்ணோம். அந்த நேரத்தில் முதலில் ஒரு ஹிந்தி காரரை வைத்து அந்த காட்சி எடுத்தோம்.

- Advertisement -

முதலில் எடுத்த போது சிரிப்பு வரல :

பிறகு டப்பிங் பண்ணும் போது யாருக்கும் அந்த காட்சியை பார்த்துட்டு சிரிக்கல. எனக்கும் அந்த காட்சி சரியாக வரலை என்று தோன்றியது. பொதுவாகவே காமெடி காட்சிக்கு மட்டும் தான் எல்லோரும் ரியாக்சன் தருவாங்க. ஆனால், அந்த சீனுக்கு யாரும் ரியாக்சன் தரல. என்ன பண்ணறது என்று யோசித்து இருந்தப்ப வெளியில் இருந்து ஓ ஓ ஓ ஆ ஆ ரொம்ப பயங்கரமான சத்தம் கேட்டது. அது யாருன்னா நெல்லை சிவா. அவர் அந்த படத்தில் செகண்ட் ஆஃப்ல ஒரு கேரக்டரில் நடிக்க இருந்தது.

குரல் கொடுத்த நெல்லை சிவா :

உடனே நான் அவரை அந்த சீனில் நடிக்க வைத்தேன். அந்த காட்சி நான் எதிர்பார்த்ததை விட நன்றாக இருந்தது. இப்போ அந்த சீசனை பார்த்தால் கூட எல்லோரும் சிரிப்பாங்க. நெல்லை சிவா உடைய வட்டார மொழி பேச்சும்,சிரிப்பும் தான் அவருடைய பிரபலத்திற்கு காரணம் என்று கூறினார். நெல்லை சிவா அவர்கள் தமிழ் சினிமா உலகில் பிரபலமானவர். தமிழ் சினிமாவில் பாண்டியராஜ் ஹீரோவாக அறிமுகமான ஆண்பாவம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் காமெடி நடிகர் நெல்லை சிவா.

-விளம்பரம்-

கடந்த ஆண்டு காலமான நெல்லை சிவா “:

அதன் பின்னர் தமிழில் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார் குறிப்பாக இவர் நடித்த வெற்றிக்கொடிகட்டு திருப்பாச்சி போன்ற திரைப்படங்கள் இவருக்கு பெரும் பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. நெல்லை தமிழில் பேசிய சிவா காமெடி நடிகரான விவேக் மற்றும் வடிவேலுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் குறிப்பாக வடிவேலுவுடன் இணைந்து நடித்த ‘கிணத்தை காணோம்’ காமெடி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் தான். இதுவரை 500க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

Injimarappa Movie On Location Photos | New Movie Posters

69 வயதில் மாரடைப்பால் மரணம் :

தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவர் இவர் விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் சீரியலிலும் அறிமுகமானார்.இப்படி ஒரு நிலையில் இவர் கடந்த ஆண்டு மே 11 ஆம் தேதி இவர் வீட்டில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இவர் இறந்த போது இவருக்கு வயது 69. மேலும், இவருக்கு திருமணமும் ஆகாவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement