தமிழ் சினிமாவில் 80 காலகட்டம் துவங்கி தற்போது வரை ‘சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்துடன் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார் ரஜினிகாந்த். இவர் தன்னுடைய திரை பயணத்தில் பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். அந்த வகையில் கடைசியாக ரஜினி நடிப்பில் வெளிவந்த ‘கூலி’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் மற்றும் சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்கள்.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை அடுத்து ரஜினி அவர்கள் தன்னுடைய அடுத்த அடுத்த படங்களில் பிசியாக இருக்கிறார். அந்த வகையில் ரஜினி 173 வது படத்தை இயக்குனர் சுந்தர்.சி தான் இயக்குகிறார் என்றும் கமலஹாசன் தான் அந்த படத்தை தயாரிக்கிறார்கள் என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி வெளியானது. ரஜினியின் சூப்பர் ஹிட் ஆன அருணாச்சலம் படத்தை சுந்தர் சி தான் இயக்கி இருந்தார்.

தலைவர் 173 படம்:
நீண்ட இடைவெளிக்கு பிறகு சுந்தர் சி- ரஜினி இணைந்திருப்பது ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்படுத்திருந்தது. கோலிவுட் வட்டாரத்தில் இதைப் பற்றி எல்லாம் நிறைய செய்திகள் வந்தது. மேலும், இது தொடர்பாக ரஜினி- கமல்- சுந்தர் சி மூவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருந்தது. இதை அடுத்து ரஜினியின் ‘தலைவர் 173 ‘படத்தில் இருந்து சுந்தர் சி விலகிய செய்தி சில மாதங்களுக்கு முன் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. இது தொடர்பாக சுந்தர் சி அறிக்கை வெளியிட்டார்.

சுந்தர் சி பேட்டி:
தேதி பிரச்சனை, கதை பிடிக்கவில்லை போன்று பல கருத்துக்களை சொன்னார்கள். இப்படி இருக்கும் நிலையில் இந்த சர்ச்சைகளுக்கு பதிலளிக்கும் வகையில் சுந்தர்சி அளித்த பேட்டியில், உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ரஜினிகாந்த் சார் படத்தை இயக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. பெரிய விஷயமாகத்தான் நான் பார்க்கிறேன். அதே நேரத்தில் அந்த வாய்ப்புடன் வந்த அழுத்தமும் எனக்கு மிக அதிகமாக இருந்தது. இதுவரை நான் இயக்கிய படங்கள் எல்லாமே என்னுடைய விருப்பப்படி தான் எடுத்தது. ஒரு கதை மக்களுக்கு பிடிக்கும் என்று தோன்றினால் அது எந்த தயக்கமும் இல்லாமல் செய்து விடுவேன்.

விலக காரணம்:
இவ்வளவு பெரிய படத்தை இயக்கும்போது ஒவ்வொரு முடிவையும் நான் மட்டும் எடுக்க முடியாது. பல எதிர்பார்ப்புகளும் இருக்கு. பலருடைய கருத்துகளும் முக்கியம். அந்த சூழ்நிலையில் நான் முழுமையாக எனக்காக இருந்து வேலை செய்ய முடியவில்லை. அந்த ப்ராஜெக்ட்டுக்கு நான் உண்மையாக இருக்க முடியாது என்று உணர்ந்தேன். அதனால் தான் படத்திலிருந்து விலக முடிவு செய்தேன். நான் எப்போதும் என்னால் நம்பிக்கையுடன் செய்ய முடியாத விஷயத்தை செய்ய மாட்டேன். அதனால் தான் இந்த முடிவைமுக்கியமாக ரஜினிகாந்த் சாரிடம் நேரடியாக சொல்லிவிட்டு தான் விலகினேன் என்று கூறியிருக்கிறார்.






