விஜய்யை வைத்து படம் எடுக்காமலேயே லாபம் சம்பாதித்தது நான் தான்- சுந்தர் சி.!

0
756
- Advertisement -

இளைய தளபதி விஜய் தனக்கு வந்த படங்களை வேண்டாம் என்று தவிர்த்து.பின்னர் அந்த படத்தில் வேறு சில நடிகர்கள் நடித்து அந்த படம் மிக பெரிய ஹிட் அடைந்ததுள்ளது என்று நமது பக்கத்தில் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம்.

-விளம்பரம்-

பொதுவாக விஜய் கதைகள் பெரும்பாலும் காதல் மற்றும் காமெடி கலந்த படமாக தான் இருந்தது. அதனால் தான் இவருக்கு குழந்தை ரசிகர்களும்,பெண் ரசிகர்களும் மிக அதிகம்.அப்படிப்பட்ட குழந்தை மற்றும் காதல் கதையாக 1996 இல் வெளிவந்த உள்ளதை அள்ளித்தா படம்.

- Advertisement -

இந்த படத்தில் நடிக்க முதலில் விஜயை தான் அணுகியுள்ளார் இயக்குனர் சுந்தர். சி ஆனால் அப்போது கோயம்புத்தூர் மாப்பிள்ளை,பூவே உனக்காக,மாண்புமிகு மாணவன் போன்ற படங்களில் நடித்து வந்த விஜய் சுந்தர். சி படத்தில் நடிக்க நோ சொல்லிவிட்டார்.

அதுமட்டுமல்ல சுந்தர் சி விஜயக்காக பல படங்களின் கதையை தயார் செய்தாராம். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சுந்தர் சி பேசுகையில், விஜய்யுடன் இன்னும் படம் பண்ணவில்லை என்பது தான் வருத்தமாக உள்ளது. அவருக்காக நான் 8 கதையை தயார் செய்தேன் ஆனால், சில பல காரணங்களால் அவர் நடிக்க முடியாமல் போனது

-விளம்பரம்-

ஆனால், அவருக்காக நான் எழுதிய 8 படமும் மற்ற சில நடிகர்கள் நடித்து மாபெரும் ஹிட் அடைந்தது. விஜய்யை வைத்து படம் எடுக்காமலேயே லாபம் சம்பாதித்தது நான் மட்டுமாக தான் இருக்கும் என்று கிண்டலாக கூறியுள்ளார் சுந்தர் சி.

Advertisement