ஒரு வேலை சாப்பாட்டுக்கும் கஷ்டம், நோய், தனிமை.! பாக்கியராஜ் பட நடிகரின் பரிதாப நிலை.!

0
2998
Bagyaraj
- Advertisement -

தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகர்கள் சிலர் கடைசி காலகட்டத்தில் சாப்பிட கூட வழியில்லாமல் கஷ்டபட்டுள்ள பல கதைகளை நாம் கண்டிருக்கிறோம். அந்த வகையில் இயக்குனர் பாக்யாராஜ் இயக்கி நடித்த சுந்தர காண்டம் படத்தில் நடித்த நடிகரின் நிலைமையை கேட்டால் சோகத்தில் ஆழ்ந்து விடுவீர்கள்.

-விளம்பரம்-

அதற்கு முக்கிய காரணமே நடிகர் நந்த கோபால் நடக்க கூட முடியாத நிலையில் பார்க்கவே மிகவும் பரிதாபமாக காணப்பட்டார். நந்த கோபாலின் நிலையை கண்ட பின்னர் அவரை ஒரு தனியார் தொலைக்காட்சி பேட்டி கேட்டுள்ளது. அப்போது அவர் அனுபவித்து வரும் பரிதாப நிலை குறித்து கூறியுள்ளார்.

இதையும் பாருங்க : விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியுள்ள ‘சிந்துபாத்’ படத்தின் முழு திரை விமர்சனம்.! 

- Advertisement -

பாக்யாராஜ் இயக்கத்தில் கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியான ‘சுந்தரகாண்டம்’ திரைப்படத்தில் பாக்கியராஜின் பள்ளி பருவ வகுப்பு தோழராக இருந்து பின்னர் அவரிடமே மாணவராக நமச்சிவாயம் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நந்தகோபால். அந்த படத்திற்கு பின்னர் பாக்கியராஜ் நடித்த ராசுக்குட்டி, சூப்பர் ஸ்டார் நடித்த அருணாச்சலம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

பல படங்களில் தனது காமெடி நடிப்பால் அனைவரையும் சிரிக்க வைத்த நந்த கோபால் இன்று ஒரு வேலை சோற்றுக்காக கூட கஷ்டப்படுகிறார். கடந்த சில ஆண்டுகளாக நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள நந்த கோபால் தற்போது சென்னை கோடம்பத்தில் ஒரு சிறிய குடியிருப்பில் கவனிக்க ஆள் இல்லாமல் தனியாக வசித்து வருகிறார்.

-விளம்பரம்-

47 வயதாகும் நந்த கோபால் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக தான் வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் இவர் பேட்டியில் பேசுகையில், எனக்கு பாதுகாப்பாக அக்காவும் அவரது கணவரும் தான் இருக்கிறார்கள். நானே ஒரு படத்தை இயக்க இருந்தது அதற்கு அட்வான்ஸ் கூட கொடுத்து ஆரம்பிக்கும் வேலையில் எனக்கு குளிர் காய்ச்சல் வந்து விட்டது. அதற்கு பின்னர் படுத்த படுக்கையாக மாறி விட்டேன். எனக்கு நடிகர் சங்கத்தில் இருந்து என்னை குணப்படுத்தினால் போதும் என்று கூறும் போது நம் கண்ணே கலங்கி விட்டது.

Advertisement