தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘பண்ணையாரும் பதமினியும்’, ‘சேதுபதி’ போன்ற படங்களை இயக்கிய எஸ் யு அருண் குமார் இயக்கத்தில் ‘சிந்துபாத்’ திரைப்படம் இன்று (ஜூன் 27) வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி, சூர்யா (விஜய் சேதுபதி மகன்), அஞ்சலி, ஜார்ஜ் மரியான் போன்ற பலர் நடித்துள்ள இந்த படத்தின் விமர்சனத்தை தற்போது காணலாம்.
கதைக்களம் :
சிறுவயதில் நாம் அனைவருமே சிந்துபாத்தின் கதையை கேட்டிருப்போம் ஆனால் இந்த சிந்துபாத் கதை ஒரு மாடல் செய்து பார்த்தேன் ஒரு நாள் மனைவியைத் தேடி கடல் கடந்து தடைகளைத் தாண்டி எதிரிகளை துவம்சம் செய்து எப்படி தனது மனைவியை மீண்டும் மீட்கிறார் என்பதே இந்த படத்தின் ஒன்லைன்.
இதையும் பாருங்க : பிக் பாஸ் வீட்டில் என்னோட க்ரஷ், இவருடன் டேட் செல்ல ஆசை.! ஐஸ்வர்யா ஓபன் டால்க்.!
தமிழ்நாட்டில் தென்காசி பகுதியில் ஒரு ஊரில் சின்ன சின்ன திருட்டு வேலைகளை செய்து வருகிறார் திரு (விஜய் சேதுபதி)திருட்டு வேலைக்கு கூடவே இருந்து உதவியாக இருந்து வருகிறார் திருவின் உடன்பிறவா சகோதரர் ஆன சூப்பர் (விஜய் சேதுபதி மகன் சூர்யா). ஊருக்குள்ளே இவர்கள் இருவரும் இணைந்து சின்னச் சின்ன திருட்டுகளில் ஈடுபட்டு சேட்டை செய்து வருகின்றனர்.
திருவான விஜய்சேதுபதிக்கு சத்தமாகப் பேசினாள் தான் காது கேட்கும் இந்த நிலையில் மலேசியாவில் ரப்பர் தோட்டத்தில் வேலை பார்க்கும் வெண்பா (அஞ்சலி )விடுமுறைக்காக தனது சொந்த ஊருக்கு வருகிறார். அதே ஊரில் தான் விஜய்சேதுபதியும் இருந்து வருகிறார். அஞ்சலிக்கு விஜய்சேதுபதியின் நேரெதிராக சத்தமாக பேசும் பழக்கம் இருக்கிறது. இதனால் தனது குறைக்கு ஏற்றார்போல பெண் கிடைத்து விட்டார் என்று அஞ்சலி மீது காதல் கொள்கிறார் விஜய் சேதுபதி.
முதல் பாதி முழுக்க காமெடி கலாட்டா காதல் சின்ன சின்ன திருட்டு என்று நகர்ந்து கொண்டே இருக்க ஒரு கட்டத்தில் அஞ்சலியும் விஜய் சேதுபதி மீது காதலில் விழுகிறார். அதன் பின்னர் விடுமுறை முடிந்து விட்டு அஞ்சலி மீண்டும் மலேசியாவிற்கு செல்லும்போது விமான நிலையத்தில் வைத்து தாலியைக் கட்டி தனது காதலியை வழியனுப்பி வைக்கிறார் விஜய் சேதுபதி.
பின்னர் மலேசியாவுக்கு செல்லும் அஞ்சலியை அங்குள்ள தாய்லாந்து ஆள் கடத்தும் கும்பல் கடத்துகிறது இதனை அறிந்த விஜய் சேதுபதி தனது காதல் மனைவியை காப்பாற்ற திருட்டு பாஸ்போர்ட்டை பயன்படுத்தியது விஜய் சேதுபதியும் சூப்பர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அவரது மகனும் ஒரு போதைபொருள் கும்பலோடு தாய்லாந்து செல்கின்றனர். பின்னர் விஜய் சேதுபதி அஞ்சலியை மீட்டாரா வேண்டும் அவரை இந்தியாவிற்கு அழைத்து வந்தாராம் என்பதுதான் கதை.
படத்தின் ப்ளஸ் :
சிந்துபாத் கதையை மாடர்ன் ட்ரெண்டுக்கு மாற்றி எடுத்துள்ளதார்க்கு இயக்குனருக்கும் முதல் பாராட்டு. படத்தின் முதல் பாதி மிகவும் ஜாலியாக நகர்கிறது. படத்தில் விஜய் சேதுபதி மற்றும் அவரது மகனின் கெமிஸ்ட்ரி ரசிக்கும்படியாக இருந்தது. ஜார்ஜ் மரியான் இந்த படத்திலும் செமையாக கலக்கியுள்ளார்.
மைனஸ் :
படத்தின் முதல் பாதி ஜாலியாக சென்றாலும் படத்தின் கதையை அடையாக சில மணி நேரம் பிடிக்கிறது. விஜய் சேதுபதி வெளிநாட்டுக்கு சென்றவுடன் வரும் காட்சிகள் கொஞ்சம் சோதிக்கிறது. படத்தில் வில்லனிடம் மட்டும் விஜய் சேதுபதி மீண்டும் மீண்டும் அவரிடம் இருந்து தப்பிக்கும் காட்சிகள் லாஜிக் மீறல்.
இறுதி அலசல் :
சூர்யா, விஜய் சேதுபதி, அஞ்சலியின் நடிப்புக்காகவே படத்தை இன்னொரு முறை பார்க்கலாம். முதல் பாதி படம் ஜாலியாக நகர்ந்தாலும், கொஞ்சம் நீளமாக தெரியுது. அதேபோல, இரண்டாம் பாதியிலும் தேவையில்லாத நிறைய காட்சிகள் வந்துட்டு போகுது. அதை கொஞ்சம் கவனமாக வெட்டியிருக்கலாம். காமெடி -, பல லாஜிக் மீறல்கள், கொஞ்சம் த்ரில் என்று உருவாகியுள்ள இந்த படத்தை ஒரு முறை மட்டுமே பார்க்கமுடியும்.