மறைந்த மூத்த நடிகர் சுந்தரத்தின் மகள் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மூத்த நடிகராக இருந்தவர் வியட்நாம் வீடு சுந்தரம். இவரை எல்லோரும் கே சுந்தரம் என்று தான் அழைப்பார்கள். இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகங்களைக் கொண்டவர். இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலருக்கு திரைக்கதை எழுதி இருக்கிறார்.
அது மட்டும் இல்லாமல் மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் விருப்பமான கதை ஆசிரியரும் இவர் தானாம்.
இவர் பத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். மேலும், சிறப்பான குடும்ப கதைகளை கொடுப்பதில் இவர் சிறந்தவர். மேலும், இவருடைய படங்கள் எல்லாம் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் இதர மொழிகளிலும் வெளியிடப்பட்டிருந்தது. இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற பிற மொழி படங்களிலும் திரைக்கதை ஆசிரியராக பணியாற்றி இருக்கிறார்.
சுந்தரம் திரைப்பயணம்:
எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல், கார்த்தி போன்ற பல முன்னணி நடிகர்களுடன் படங்களில் இணைந்து பணியாற்றி இருக்கிறார். இவர் வெள்ளி திரையில் மட்டுமில்லாமல் சின்ன திரையிலும் பல சீரியல்களில் நடித்திருக்கிறார். அதிலும் இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்த பல சீரியல்களுக்கு இயக்குனர், நடிகர், திரைக்கதை எழுத்தாளர் என பணியாற்றி இருக்கிறார். இவர் 2016 ஆம் ஆண்டு வயது மூப்பின் காரணமாக தன்னுடைய 76 வயதில் காலமானார்.
சுந்தரம் மறைவு:
இவருடைய மறைவிற்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கலை தெரிவித்து இருந்தார்கள். இந்நிலையில் இவருடைய மகளைக் குறித்து பலரும் அறிந்திடாத தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இவருடைய மகளின் பெயர் அனு பார்த்தசாரதி. இவர் ஃபேஷன் காஸ்டியூம் டிசைனர் படித்து முடித்து இருக்கிறார். இவரும் தன் தந்தையைப் போல சினிமாவில் தான் பணியாற்றி வருகிறார். இவர் பல நடிகர்களுக்கு காஸ்டியும் டிசைனராக பணியாற்றி இருக்கிறார்.
அனு திரைப்பயணம்:
இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் ஹிந்தி, தெலுங்கு போன்ற பிறமொழிகளிலும் பணியாற்றி வருகிறார். இவர் ஒளிப்பதிவாளரும் ஆவார். இவர் ஜீன்ஸ், வாலி, துள்ளாத மனமும் துள்ளும், பூவெல்லாம் உன் வாசம், பஞ்சதந்திரம், மன்மதன், ஜில்லுனு ஒரு காதல், போக்கிரி, மொழி, அபியும் நானும், சிங்கம், ஆடுகளம், எதிர்நீச்சல், அனேகன் போன்ற பல படங்களில் பணியாற்றியிருக்கிறார்.
வைரலாகும் புகைப்படம்:
கடைசியாக துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகியிருந்த ஹே சினாமிகா என்ற படத்தில் இவர் பணியாற்றி இருந்தார். தற்போது இவருடைய புகைப்படம் ஒன்று வெளியாகியிருக்கிறது. இதை பார்த்த பலரும் இவர் தான் மறைந்த மூத்த நடிகர் சுந்தரத்தின் மகளா! என்று வியந்து புகைப்படத்தை வைரலாகி வருகிறார்கள்.