ஷூட்டிங்கிற்கு தாமதமாக வரும் நடிகர்கள் ? விஜய் டிவி இயக்குனரின் புலம்பல் – சீரியல் பிரபலத்தின் பதிலடி.

0
717
rajarani2
- Advertisement -

என் மனைவி எப்போதும் சூட்டிங்க் லேட்டாக போனதே இல்லை என்று சஞ்சீவ் போட்ட போஸ்ட் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அந்த வகையில் விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் சென்று கொண்டிருக்கும் தொடர்களில் ராஜா ராணி 2 சீரியலும் ஒன்று. கடந்த ஆண்டு 2019 ஆம் ஆண்டு முடிவடைந்த ராஜா ராணி சீரியல் இளைஞர்கள் முதல் பல குடும்பங்கள் வரை என எல்லோர் மனதில் பெரும் வரவேற்பை பெற்றது.

-விளம்பரம்-
ராஜா ராணி சீசன் 2 - Raja Rani season 2 | பெமினா தமிழ்

அதனை தொடர்ந்து ராஜா ராணி 2 என்ற சீரியல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த சீரியல் முழுக்க முழுக்க கூட்டு குடும்ப கதையை மையமாக கொண்டது. இந்த சீரியலில் சரவணன் என்ற கதாபாத்திரத்தில் சித்து நடிக்கிறார். சந்தியா என்ற கதாபாத்திரத்தில் ஆலியா நடிக்கிறார். தற்போது இந்த சீரியல் டிஆர்பியில் முதல் இடத்தில் உள்ளது. ஐபிஸ் ஆக வேண்டும் என லட்சியத்தை நனவாக்க போராடும் ஒரு பெண்ணின் கதை.

- Advertisement -

ராஜா ராணி 2 சீரியல் இயக்குனரின் வேதனை:

இந்த தொடர் ஹிந்தி சீரியல் Diya Aur Baati Hum ரீமேக் ஆகும். மேலும், இந்த சீரியலை இயக்குனர் பிரவீன் பெண்ணெட் இயக்கி வருகிறார். முதல் சீசனை தொடர்ந்து இரண்டாவது சீசனையும் இவரே எடுத்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருக்கிறார். அதில் அவர் ‘நடிகர்கள் இன்னும் வரல, ரொம்ப போரடிக்குது. ரொம்ப லேட்டா வராங்க’ என்று வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.

ஆலியாவை விமர்சித்த நெட்டிசன்கள்:

இப்படி இவர் பதிவிட்டதை சோஷியல் மீடியாவில் நெட்டிசன்கள் ஆலியா மானஷாவின் புகைப்படத்தை பதிவிட்டு இயக்குனர் பிரவீன் அவர்கள் ஆலியாவை தான் குறிப்பிடுகிறார் என்றும், ஆலியா இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்கிறார்.அதனால் தான் ஷூட்டிங்க் தாமதமாக வருகிறார் என்றும் கமெண்ட் போட்டு இருந்தார்கள். இந்நிலையில் இதற்கு பதில் அளிக்கும் விதமாக நடிகர் சஞ்சீவ் தற்போது இன்ஸ்டாகிராமில் போஸ்டு ஒன்று போட்டிருக்கிறார்.

-விளம்பரம்-

பதிலடி கொடுத்த ஆலியா கணவர் சஞ்சீவ்:

அதில் அவர் கூறி இருப்பது, ஆலியா ஒரு நாள் கூட சூட்டிங்க்கு தாமதமாக போனது இல்லை. ஷூட்டிங்க்கு எப்போதுமே அவர் நேரத்தில் சென்றுவிடுவார். ஷூட்டிங் தொடங்கிய நாளில் இருந்து இன்று வரையும் அவர் எப்போதும் லேட்டாக போனதில்லை. பிரவீன் சார் யாரை சொல்கிறார் என்பது தெரியலையே என்று பதிவிட்டிருக்கிறார். இப்படி இவர் பதிவிட்ட போஸ்ட் தற்போது சோஷியல் மீடியாவில் வருகிறது. இதன் மூலம் ஆலியாவை விமர்சித்த பல பேருக்கு பதில் கிடைத்து இருக்கும்.

eededee

ஆலியா இரண்டாவது முறை கர்ப்பம்:

மேலும், ராஜா ராணி சீரியல் போது சஞ்சீவ்-ஆலியா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.
இவர்களுக்கு அய்லா என்ற பெண் குழந்தை உள்ளது. சிறிய இடைவெளி எடுத்துக் கொண்ட ஆல்யா தற்போது இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்கிறார். இதனால் இவர் ராஜா ராணி 2 சீரியலில் தொடருவரா? இல்லையா? என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம். அதேபோல் சஞ்சீவ் சன் டிவியில் சமீபத்தில் தொடங்கிய கயல் சீரியலில் நடித்து வருகிறார்.

Advertisement