பிக் பாஸ் போட்டியாளருடன் திடீரென நிச்சயம் முடித்த சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியல் ஹீரோயின்.

0
681
sundari
- Advertisement -

சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியல் நடிகையின் நிச்சயதார்த்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சிகளில் பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல் தான் சுந்தரி நீயும் சுந்தரன் நானும். இந்த தொடர் முழுக்க முழுக்க காதல், குடும்பம், அரசியல் ஆகிய பின்னணியில் உருவாகி இருந்தது.

-விளம்பரம்-

இந்த தொடரை அப்துல் கபீஸ் என்பவர் இயக்கி இருந்தார். மேலும், இந்த தொடரில் முன்னணி நடிகர்களாக வினோத் பாபு மற்றும் தேஜஸ்வினி நடித்து இருந்தார்கள். இந்த தொடரில் நடுத்தர குடும்பத்தில் பிறந்த தமிழரசி என்ற கதாபாத்திரத்தில் தேஜஸ்வினி நடித்து இருந்தார் . இவர் தன்னுடைய தாய், இரண்டு சகோதரிகள், தாத்தா அரவணைப்பில் வளர்கிறார். பள்ளி ஆசிரியராக பணிபுரிகிறார். பணக்கார குடும்பத்தை சேர்ந்த வேல்முருகன் சிறுவயதிலிருந்து தாய்,தந்தையை இழந்து அவன் பாட்டியின் அரவணைப்பில் வளர்கிறார்.

- Advertisement -

சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியல்:

பின் இவர்கள் இருவரும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். இவர்கள் இருவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியாமலேயே ஒருவர் ஒருவரை காதலிக்கின்றனர். ஒரு கட்டத்தில் உண்மை தெரியவர பழைய பகை மீண்டும் உருவெடுக்கிறது. இறுதியில் இவர்கள் இருவரும் சேர்ந்தார்களா? என்பது தான் கதையின் சுவாரசியமே. ஆனால், இந்த தொடர் மக்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இதனால் கடந்த ஆண்டு இந்த சீரியல் திடீர் முடிவுக்கு வந்தது.

தேஜஸ்வினி கவுடா குறித்த தகவல்:

மேலும், இந்த தொடரின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை தேஜஸ்வினி கவுடா. ஆனால், இவர் இதற்கு முன்பே தெலுங்கு, கன்னடம் போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து இருக்கிறார். இவர் 2018 ஆம் ஆண்டு வெளியான வீணா பொன்னப்பாவுடன் பில் ஹிந்தி என்ற கன்னட சீரியல் மூலம் தான் சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுத்திருந்தார். அதற்கு பின்பு இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழி சீரியல்களில் பிசியாக நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

வித்யா நம்பர் 1 சீரியல்:

அதுமட்டுமில்லாமல் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் வித்யா நம்பர் 1 என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் இவர் படிப்பறிவு இல்லாத கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும், இந்த சீரியல் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் நடிகை தேஜஸ்வினிக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ள தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தேஜஸ்வினி நிச்சயதார்த்தம்:

அதாவது. நடிகை தேஜஸ்வினிக்கும் கன்னட பிக்பாஸ் பிரபலம் அமர்தீப் சௌத்திரிக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இதில் இவர்களுடைய நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டு இருந்தார்கள். தற்போது இவர்களுடைய நிச்சயதார்த்த புகைப்படம் சோசியல் மீடியாவில் பரவலாகி வருகிறது. இதை பார்த்த பலரும் தேஜஸ்வினிக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் திருமணம் எப்போது? என்ற கேள்வியையும் எழுப்பி வருகிறார்கள்.

Advertisement