சுந்தரி To Ceo – சுந்தரி சீரியலில் நடந்த Transformation புகைப்படத்தை பகிர்ந்த கேபி. ப்பா, வேற லெவல்ல ஆகிட்டாங்களே.

0
1453
sundari
- Advertisement -

அடையாளம் தெரியாமல் ஸ்டைலாக மாறி போய் இருக்கும் சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியலா புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் கேப்ரில்லா. இவர் தடை செய்யப்பட்ட டிக் டாக் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமாகி இருந்தார். அதன் பின் விஜய் டிவியில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஒளிபரப்பாகி இருந்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பலருக்கும் பரிட்சயமாகி இருந்தார் கேப்ரில்லா. அதற்கு பிறகு இவர் எண்ணற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருந்தார்.

-விளம்பரம்-
Sun Tv Sundari Serial Actress Gabrella Sellus Modern Look

அதுமட்டுமில்லாமல் பல ஷார்ட் பிலிம்களில் கூட கேப்ரில்லா நடித்திருந்தார். பின் கடந்த 2019ஆம் ஆண்டு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த படம் ஐரா. இந்த திரைப்படத்தில் சிறுவயது நயன்தாரா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி இருந்தார் கேப்ரில்லா. அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார். தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலம் கேப்ரில்லா தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்து இருக்கிறார்.

- Advertisement -

கேப்ரில்லாவின் சுந்தரி சீரியல்:

மேலும், இந்த சீரியல் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. எப்படியாவது ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற கனவோடு எண்ணற்ற இன்னல்களை சமாளித்து போராடும் கதாபாத்திரம் தான் சுந்தரி. அதுமட்டுமில்லாமல் சுந்தரி கருப்பு நிறம் உடையவள். ஆகவே, நிறத்திற்கும் சாதனை செய்வதற்கும் சம்பந்தமில்லை என்பதை முறியடித்து போராடி வருகிறார் சுந்தரி. அதனாலே இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் சீக்கிரமாக இடம் பிடித்து விட்டது.

Serial Gabriella Sellus Transformation Video | சுந்தரி சீரியல்

ஏ ஆர் ரகுமான் இசையில் கேப்ரில்லா:

அதுமட்டும் இல்லாமல் கேப்ரில்லா நடித்து வரும் சுந்தரி சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலையில் இருக்கிறது. இதனை தொடர்ந்து இவர் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இயக்கியிருக்கும் ஆல்பம் சாங்கில் பணியாற்றி இருக்கிறார். ஏ ஆர் ரகுமான் ‘மூப்பில்லா தமிழ் தாயே’ என்ற ஆல்பம் ஒன்றை இயக்கி இருக்கிறார். இந்த பாடலில் கேப்ரில்லா பாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சுந்தரி சீரியலில் கேப்ரில்லா எப்படி திறமையான, துடிப்பான பெண்ணாக இருக்கிறாரோ நிஜத்திலும் அப்படித்தான் இருக்கிறார்.

-விளம்பரம்-

சுந்தரிக்கு கிடைத்த விருது:

சீரியலை தாண்டி கேப்ரில்லா சோசியல் மீடியாவில் படு பிஸி என்று சொல்லலாம். மேலும், இவர் அடிக்கடி போட்டோ ஷூட், ரீல்ஸ் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். இதனால் இவரை சோசியல் மீடியாவில் எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். சமீபத்தில் சன் டிவி குடும்ப விருதுகள் நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் சுந்தரி சீரியலுக்காக கேப்ரில்லாவுக்கு ஃபேவரட் ஹீரோயின் பிரிவில் விருது வழங்கப்பட்டு இருந்தது. இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள்.

சுந்தரியின் புது கெட்டப் புகைப்படம்:

இந்த நிலையில் சுந்தரியின் புது கெட்டப் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், சீரியலில் சுந்தரி கலெக்டர் ஆகவேண்டும் என்பதற்காக அவரை வேற கெட்டப் மாற்றுகிறார் அனு. அதில் சுந்தரி அவர்கள் தலை முடி கட் செய்து முகமே வேற ஒரு நாயகி போல் தெரிகிறது. சுந்தரியின் இந்த புதிய லுக்கை பார்த்த ரசிகர்கள் பலரும் அட இது நம்ம சுந்தரியா! என்று ஆச்சரியத்தில் வியந்து போயிருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் தற்போது சுந்தரியின் புகைப்படம் சோசியல் மீடியாவில் பரவலாகி வருகிறது.

Advertisement