கணவரை போட்டு தள்ள முயற்சித்த தசுந்தரி சீரியல் கைது – பொள்ளாச்சியில் பரபரப்பு

0
903
- Advertisement -

-விளம்பரம்-

தன்னுடைய கணவரை கொலை செய்ய நண்பர் மூலம் முயற்சித்து இருக்கும் சுந்தரி சீரியலின் துணை நடிகை ரம்யா கைதாகி இருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கும் சீரியலில் சுந்தரி சீரியலும் ஒன்று. இந்த சீரியல் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. எப்படியாவது ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற கனவோடு எண்ணற்ற இன்னல்களை சமாளித்து வரும் கதாபாத்திரம் தான் சுந்தரி.

- Advertisement -

அதுமட்டுமில்லாமல் சுந்தரி கருப்பு நிறம் என்பதால் நிறத்திற்கும் சாதனை செய்வதற்கும் சம்பந்தமில்லை என்பதை முறியடித்து போராடி வருகிறார். அதனாலே இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் சீக்கிரமாக இடம் பிடித்து விட்டது. மேலும், இந்த சுந்தரி சீரியலில் துணை கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் ரம்யா. இவர் கோவையில் பீளமேடு பகுதியை சேர்ந்தவர். இவர் கோவையில் பொள்ளாச்சி அருகில் உள்ள டி நல்லகவுண்டன் பாளையம் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரை கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

நடிகை ரம்யா குறித்த தகவல்:

ரமேஷ் அந்த பகுதியிலேயே குளிர்பான கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறது. பின் சில மாதங்களுக்கு முன்பு நடிகை ரம்யாவிற்கும் அவருடைய கணவர் ரமேஷுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் ரம்யா தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்று விட்டார். பின் சினிமாவின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக இவர் கவுண்டபாளையம் பகுதியை சேர்ந்த டேனியல் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

-விளம்பரம்-

சீரியல் வாய்ப்பு:

இதன் மூலம் ரம்யாவிற்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி என்ற சீரியல் துணை நடிகையாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் பின் இவர் கண்ணெதிரே தோன்றினாள் என்ற சீரியலிலும் துணைநடியாக நடித்து வருகிறார். இப்படி இவர் சீரியலில் பிசியாக நடித்துக் கொண்டிருப்பதால் ரம்யா தன்னுடைய குழந்தைகளை அம்மா வீட்டிலேயே விட்டு விட்டார். இதற்கு இடையில் இவர் தன்னுடைய கணவரை பார்ப்பதற்காக ரமேஷ் வீட்டுக்கு சென்று இருக்கிறார்.

கொலை செய்ய முயற்சித்த நடிகை:

பின் ரம்யா தன்னுடைய கணவர் குடித்துவிட்டு கொடுமைப்படுத்தியதாகவும், அவரை எப்படியாவது கொலை செய்து விட வேண்டும் என்று நண்பர் சந்திரசேகனிடம் கூறியிருக்கிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ரம்யாவும், ரமேஷும் இருசக்கர வாகனத்தில் சென்றிருந்தார்கள். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இரு சக்கர வாகனத்தில் மோதி இருக்கிறார்கள். இருவரும் கீழே விழுந்த நிலையில் மர்ம நபர் மறைத்து வைத்திருந்த ஆக்ஸா பிளேடு மூலம் ரமேஷ் கழுத்து, கை,கால், தலைப்பகுதிகளில் அறுத்து விட்டு அங்கிருந்து தப்பித்து ஓடி விட்டார்கள். அதன் பின் பலத்த காயங்களுடன் இருந்த ரமேஷை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

கைதான துணை நடிகை:

மேலும், இந்த சம்பவம் குறித்து ரமேஷ் பொள்ளாச்சி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். ரமேஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் ரம்யா மற்றும் சந்திரசேகரின் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டிருக்கின்றனர். முதற்கட்ட விசாரணையை போலீசார் ரம்யாவிடம் தொடர்ந்து இருக்கிறார்கள். அப்போது ரம்யாவின் மொபைல் போன் அழைப்பிதழ் மூலம் ரம்யா தான் தன்னுடைய கணவரை நண்பர் மூலம் கொலை செய்ய திட்டமிட்டு இருப்பது தெள்ளத் தெளிவாக தெரிந்தது. இதை தொடர்ந்து ரம்யா மற்றும் சந்திரசேகர் இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திருக்கிறார்கள். தற்போது அவர்கள் கோவை மத்திய சிறையில் இருக்கின்றனர்.

Advertisement