திருமகள் சீரியல் நடிகையை கரம்பிடித்த சுந்தரி சீரியல் நடிகர் – குவியும் வாழ்த்துக்கள்

0
569
- Advertisement -

சுந்தரி சீரியல் நடிகர் அரவிஷ்-ஹரிகா திருமண புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை தொடர்கள் விளங்குகிறது. சமீப காலமாகவே புதுப்புது வித்தியாசமான கதைகளத்துடன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். சீரியல்கள் மட்டுமில்லாமல் அதில் நடிக்கும் நடிகர் நடிகைகளும் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார்கள். மேலும், சமீப காலமாகவே சின்னத்திரையில் சேர்ந்து நடிக்கும் நடிகர்- நடிகைகள் காதலித்து திருமணம் செய்து இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

அந்த வகையில் சேத்தன்-தேவதர்ஷினி, செந்தில்-ஸ்ரீஜா, ஷபானா- ஆரியன், மதன்- ரேஷ்மா, ஸ்ரேயா- சித்து போன்ற பல பிரபலங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். தற்போது இந்த வரிசையில் அரவிஷ் – ஹரிகா இணைந்து இருக்கிறார்கள். சன் டிவியில் ஒளிபரப்பான மிகப் பிரபலமான தொடர்களில் ஒன்று தென்றல். இந்த தொடரின் மூலம் அரவிஷ் சின்ன திரையில் அறிமுகமானவர்.

- Advertisement -

அரவிஷ் குறித்த தகவல்:

இதனை அடுத்து இவர் தற்போது சன் டிவியில் மிகப் பிரபலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சுந்தரி தொடரில் ஹீரோவுக்கு நண்பனாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் சன் டிவி தொடரில் ஒளிபரப்பாகும் இலக்கிதொடரிலும் இவர் ஹீரோவுக்கு தம்பியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த சீரியல்களின் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் ரீல்ஸ் வீடியோக்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் படு பேமஸ்.

அரவிஷ் – ஹரிகா காதல்:

அதிலும் இவர் நடிகை ஹரிகா உடன் சேர்ந்து நிறைய ரீல்ஸ் வீடியோக்கள் செய்து இருக்கிறார்கள். பின் இவர்கள் இருவரும் காதலிக்க தொடங்கினார்கள். இவர்கள் இருவரும் தனியாக யூடுயூப் சேனல் நடத்தி வருகிறார்கள். ஹரிக்கா சன் டிவியில் ஒளிபரப்பான திருமகள் தொடரின் மூலம் கதாநாயகியாக மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்டவர். இவர் இந்த சீரியல் மட்டும் இல்லாமல் தெலுங்கு தொடர்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

அரவிஷ் – ஹரிகா நிச்சயதார்த்தம்:

இவர் ஆந்திர மாநிலம் சேர்ந்தவர், அரவிஷ் கோயம்புத்தூரை சேர்ந்தவர். சன் டிவி தொடரின் மூலம் தான் இவர்கள் இருவருமே காதலிக்க தொடங்கினார்கள். அதுமட்டுமில்லாமல் இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டாருமே பச்சைக்கொடி காட்டி விட்டார்கள். பின் கடந்த ஆண்டு இவர்களுக்கு இரு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற இருக்கிறது. இவர்களுடைய நிச்சயதார்த்த நிகழ்வில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு இருந்தார்கள்.

அரவிஷ் – ஹரிகா திருமணம்:

இந்த நிலையில் அனைவரும் எதிர்பார்த்த அரவிஷ் – ஹரிகா திருமணம் இன்று கோயம்புத்தூரில் நடைபெற்று இருக்கிறது. இந்த திருமணத்தில் குடும்ப உறவினர்கள், நண்பர்கள் கலந்து இருக்கிறார்கள். மேலும், அவர்களுடைய திருமணத்தில் சின்னத்திரை பிரபலங்கள் சிலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திருக்கிறார்கள். தற்போது இவர்களுடைய திருமண புகைப்படம் இணையத்தில் வைரலானைத் தொடர்ந்து பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement