புரட்சி தலைவர் என்ற பட்டம் எம்.ஜி.ஆருக்கு ஏற்புடையதா? அமீர் ஆவேச கேள்வி

0
190
- Advertisement -

எம்ஜிஆருக்கு புரட்சித்தலைவர் பட்டம் கொடுக்கப்பட்டது சரியா? என்று செய்தியாளர்கள் சந்திப்பில் அமீர் கூறி இருக்கும் கருத்து தான் தற்பொழுது சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் அமீர். இவர் ஆரம்பத்தில் இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக தன்னுடைய திரையுலக பயணத்தை தொடங்கினார். பின் இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த சேது மற்றும் நந்தா ஆகிய படங்களில் அமீர் பணியாற்றியிருக்கிறார்.

-விளம்பரம்-

பின்னர் 2002 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளிவந்து இருந்த மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார் அமீர். இதற்குப் பிறகு இவர் ராம், பருத்திவீரன், ஆதிபகவன், பேரன்பு போன்ற பல படங்களை இயக்கி இருந்தார். இவர் இயக்கிய படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்து இருக்கிறது. மேலும், இவர் படங்களை இயக்குவது மட்டுமில்லாமல் Teamwork Production House என்ற பெயரில் சொந்தப் படத் தயாரிப்பு நிறுவனத்தை வைத்து இருக்கிறார்.

- Advertisement -

உயிர் தமிழுக்கு படம்:

தற்போது அமீர் ஹீரோவாக நடித்திருக்கும் படம் உயிர் தமிழுக்கு. இந்த படத்தில் சாந்தினி ஸ்ரீதரன், ஆனந்த்ராஜ், இமான் அண்ணாச்சி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தை ஆதம் பாவா இயக்கி தயாரித்தும் இருக்கிறார். இந்த படத்திற்கு வித்தியாசாகர் இசையமைத்து இருக்கிறார். அரசியல் பின்னணியை மையமாகக் கொண்டு இந்த படத்தை எடுத்திருக்கிறார்கள். இந்த படம் வருகிற பத்தாம் தேதி வெளியாக இருக்கிறது.

பத்திரிக்கையாளர் சந்திப்பு:

தற்போது இந்த படத்தினுடைய ப்ரமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் செய்தியாளர்களை படக்குழு சந்தித்திருக்கிறது. அப்போது அமீர், படத்தில் மக்கள் போராளி என்று என்னுடைய பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. எனக்கும் அந்த பட்டத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இதை நான் இயக்குனரிடம் ஏற்கனவே சொல்லிவிட்டேன். பட்டங்களும், விருதுகளும் தகுதியின் அடிப்படையில் தான் வரவேண்டும்.

-விளம்பரம்-

எம் ஜி ஆர் குறித்து சொன்னது:

அதை நாம் காசு கொடுத்து வாங்க கூடாது. எம்ஜிஆருக்கு மக்கள் திலகம் என்ற பட்டம் சரியானது. ஆனால், புரட்சித் தலைவர் என்ற பட்டம் பட்டம் சரியானதா? என்று கேட்டால் அது பெரிய கேள்விக்குறி தான். காரணம், புரட்சி என்பது சாதாரணமானது கிடையாது. இந்த உலகில் புரட்டி போடும் அளவிற்கு புரட்சி செய்த புரட்சியாளர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இதனால் நான் நான்கு படம் எடுத்து, இரண்டு படத்தில் நடித்திருக்கிறேன். அதனால் நான் ஒரு போராளி என்றால் சொல்ல முடியாது. மாஞ்சோலை தேயிலை தொழிலாளர்கள் தாமிரபரணியில் சம்பள ஊதியம் கேட்டு இறந்தார்கள். அந்த போராளிகளை எப்படி பார்ப்பது? இப்போது தூத்துக்குடியில் 13 போராளிகள் இறந்தார்கள்.

போராளி குறித்து சொன்னது:

நம்முடைய மண்ணை மீட்பதற்காக ஆங்கிலேயர்களிடம் போராடி பலர் இறந்தார்களே அவர்கள் எல்லாம் யார்? ஆகவே போராளி என்பது பெரிய வார்த்தை. அதை காலம்தான் கொண்டு வந்து சேர்க்க வேண்டும். களத்தில் இருக்க வேண்டும் என்றால் இருக்கத்தான் வேண்டும். இந்த சினிமா வெளிச்சம் எங்கள் மீது படும்போது எங்களுடைய சுய புராணத்தையோ, பெருமையோ, வாழ்க்கை வளர்ச்சி வீடியோக்களையும் செய்யக்கூடாது. இந்த வெளிச்சம் சினிமாவால் தான் கிடைக்கிறது. இதை மக்கள்தான் கொடுத்தார்கள். அவர்களுக்குத்தான் அதை திருப்பி கொடுக்க வேண்டும். அந்த எண்ணம் எப்போதும் எனக்குள் இருக்கிறது. அதனால் கடைசி வரைக்கும் நான் மக்களோடு தான் இருப்பேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement