தன் பட ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற சந்தீப் கிஷன் – அவரின் 13 ஆண்டு பழைய சுறா பதிவை தோண்டி எடுத்து கலாய்க்கும் ரசிகர்கள்.

0
523
sandeep
- Advertisement -

தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘மாநகரம்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் சந்தீப் கிஷான். இவர் ஏற்கனவே ‘யாருடா மகேஷ்’ என்ற படத்திலும் நடித்துள்ளார். தமிழில் அறிமுகமாவதற்கு முன்பாகவே முன்பாகவேய தெலுங்கில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இதுவரை தமிழில் நெஞ்சில் துணிவிருந்தால், மாயவன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார் சந்தீப். சமீபத்தில் இவர் விஜய்யுடன் எடுத்த புகைப்படம் விஜய் ரசிகர்களால் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறார்.

-விளம்பரம்-

விஜய் ஒரு காலத்தில் தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து இருந்தார். அதில் சுறா திரைப்படம் விஜய்க்கு மாபெரும் தோல்விப்படமாக அமைந்தது.2010-ஆம் ஆண்டு வெளி வந்த இந்த படத்தினை இயக்குநர் எஸ்.பி.ராஜ்குமார் இயக்கியிருந்தார். இதில் ‘தளபதி’ விஜய்-க்கு ஜோடியாக பிரபல நடிகை தமன்னா நடித்திருந்தார். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் வடிவேலு, தேவ் கில், ரியாஸ் கான், ஸ்ரீமன் ஆகியோர் நடித்திருந்தனர்.

- Advertisement -

‘தளபதி’ விஜய்யின் திரை உலக வாழ்வில் ‘சுறா’ திரைப்படம் அவருக்கு 50-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், விஜய் சினிமா வரலாற்றில் சுறா படம் தான் மோசமான படம் என்ற ஒரு பெயரையும் அப்போது எடுத்து. இப்படி ஒரு நிலையில் இந்த படம் வெளியான போது மாநகரம் படத்தில் நடித்த சந்தீப் கிஷன் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த படத்தை விமர்சித்து பதிவு ஒன்றை போட்டு இருந்தார்.

அதில் ‘சுறா படத்தை பார்த்தேன் ஐதராபாத் விட இது மிகப் பெரிய டார்ச்சர் இந்த படத்தின் கதையை கேட்ட போதும் விஜய்க்கும் அப்படித்தான் இருந்திருக்கும்’ என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த பதிவு விஜய் ரசிகர்களை பெரும் கோபத்திற்கு உள்ளாகியது. இதனால் விஜய் ரசிகர்கள் பலர் இவரை திட்டி தீர்த்தனர். இதற்கு விளக்கம் கொடுத்த சந்தீப்’இதை நான் யாருக்கும் நிரூபிக்க வேண்டியதில்லை.

-விளம்பரம்-

ஆனால் என்னுடைய வார்த்தைகளை நான் மறுபரிசீலனை செய்ய ஒரு சில கணங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது.இந்தப் பதிவை எடுத்து வைத்துக் கொண்டு என்னிடம் எப்போது வேண்டுமானால் கேளுங்கள். அப்போதும் நான் இந்த கருத்தில் தான் உறுதியாக இருப்பேன்.’ எனக்கு விஜய் சாரை மிகவும் பிடிக்கும். அவர் பல கடினமான தருணங்களில் என்னை பலவழிகளில் ஊக்கப்படுத்தியுள்ளார்.

இதில் வெட்கப்பட ஏதுமில்லை. விஜய் சார் படங்களை ரசித்தே நான் வளர்ந்தேன். இடைப்பட்ட காலங்களில் ஒரு வழக்கமான சினிமா ரசிகனாக தொலைந்து போனேன். ஆனால் இன்று கடந்த 10 ஆண்டுகளாக அவருடைய பயணம் எனக்கு மிகப்பெரிய ஊக்கத்தை அளித்தது என்று பெருமையுடன் சொல்வேன். இன்று நான் அவருடைய மிகப்பெரிய ரசிகனாக இருக்கிறேன்’ என்று கூறி இருந்தார்.

இப்படி ஒரு நிலையில் சந்தீப் கிஷன் தற்போது மைக்கேல் படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படம் நாளை வெளியாக இருக்கும் வேலையில் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்று, விஜய்யுடன் எடுத்த சமீபத்திய புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அவரின் இந்த பதிவை கண்ட விஜய் ரசிகர்கள் பலரும் சந்தீப் கிஷன் போட்ட சுறா குறித்த பதிவை தற்போது சுட்டிக்காட்டி ‘பழைய எதிரிகள் உன் ரசிகர் படையிலே’ என்று விஜய்யின் தீ தளபதி பாடல் வரியை குறிப்பிட்டு சந்தீப் கிஷனை விமர்சித்து வருகின்றனர்.

Advertisement