குஷ்பு இல்லை என்றால் கண்டிப்பாக இந்த நடிகையிடம் காதலை சொல்லியிருப்பேன்..! சுந்தர்.சி ரகசியம்

0
2595
Sundhar

இயக்குனர் சுந்தர் சி, தமிழ் சினிமாவில் மசாலா படங்களை எடுப்பதில் சிறந்த இயக்குனராக இருந்து வருபவர். தற்போது “சங்கமித்ரா” என்ற பிரம்மாண்ட வரலாற்று சிறப்பு மிக்க படத்தை இயக்கி வருகிறார். இவர் பிரபல நடிகை குஷ்புவை திருமணம் செய்து கொண்டார் என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம் தான்.

kushboo

கடந்த 2001 ஆம் ஆண்டு நடிகை குஷ்பூவை திருமணம் செய்துகொண்ட இவருக்கு பின்னர் இரண்டு மகளும் பிறந்தனர். சமீபத்தில் கூட நடிகை குஷ்பு, தனக்கும் நடிகர் பிரபுவிற்கும் இருந்த தொடர்பை பற்றி வெளிப்படையாக பேசி இருந்தார்.

இந்நிலையில் இயக்குனர் சுந்தர் சி, ஒருவேளை தான் குஷ்புவை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்திருந்தால் மறைந்த பிரபல நடிகை சௌந்தர்யாவிடம் தனது காதலை தெரிவித்திருந்திருப்பேன் என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Soundarya

நடிகை சௌந்தர்யா தமக்கு மிகவும் பிடித்த நாயகி என்றும், அவர் எப்போதும் அவர் அண்ணனுடன் தான் இருப்பார் , ஆனால் இறுதியில் அவருடனே இருந்து விட்டார் என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். மேலும் நடிகை சௌந்தர்யா இயக்குனர் சுந்தர் சி இயக்கிய, சூப்பர் ஸ்டார் நடித்த ” அருணாச்சலம் ” என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.