தர்பார் பட வில்லன் மகளுடன் தாலி கட்டாமலேயே வாழ்ந்து வரும் இந்திய கிரிக்கெட் வீரர் ? யார் தெரியுமா ?

0
401
sunil
- Advertisement -

பிரபல கிரிக்கெட் வீரரும், நடிகையும் சொகுசு வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து லிவ்விங் டுகெதர் வாழ்க்கை நடத்தி வரும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 2020 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த படம் தர்பார். இந்த படத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும், இந்த படத்தில் வில்லனாக சுனில் ஷெட்டி மிரட்டியிருப்பார். இவர் பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகர் ஆவார்.

-விளம்பரம்-

இவர் நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், தொகுப்பாளர் ஆவார். இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் மலையாளத்தில் வெளியான மோகன்லாலின் அரபிக்கடலின் சிங்கம் என்ற படத்திலும் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட இவர் 30 ஆண்டுகளாக சினிமா துறையில் பயணித்து வருகிறார். இதுவரை சுனில் செட்டி 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

- Advertisement -

சுனில் ஷெட்டியின் குடும்பம்:

இதனிடையே பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி மானா செட்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறது. ஆதியா ஷெட்டி, ஹான். மேலும், சுனில் ஷெட்டியின் மகள் ஆதியா செட்டி அவர்கள் பாலிவுட்டில் இளம் நடிகையாக அறிமுகமாகி உள்ளார். இவர் 2015ஆம் ஆண்டு வெளியான ஹீரோ என்ற படத்தின் மூலம் தான் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் முபாரகான், நவாப்ஸாதே, மோட்டிசூர் சக்காசூர் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

கேஎல் ராகுல் – ஆதியா ஷெட்டி காதல்:

இந்நிலையில் சுனில் ஷெட்டியின் மகளும், பிரபல கிரிக்கெட் வீரரும் சொகுசு வீடு ஒன்றை வாடகை எடுத்து லிவிங் டுகெதரில் வாழ்க்கையை நடத்தி வரும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாகவே கிரிக்கெட் வீரர்களும், நடிகைகளும் காதலிப்பது பல காலமாகவே அரங்கேறி வருவது அனைவருக்கும் தெரிந்ததே. அந்தவகையில் லேட்டஸ்ட் காதல் ஜோடிகளாக கேஎல் ராகுல் மற்றும் ஆதியா இணைந்துள்ளனர். மேலும், இவர்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

கேஎல் ராகுல் – ஆதியா ஷெட்டி லிவ்விங் டுகெதர்:

இருவரும் பல முறை டேட்டிங் சென்ற புகைப்படங்கள், வீடியோக்களை எல்லாம் சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருக்கின்றனர். இதுகுறித்து பாலிவுட்டிலும் பல கிசுகிசுக்கள் வெளியானது. இந்த நிலையில் இவர்கள் இருவரும் மும்பையில் 4BHK சொகுசு வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து உள்ளார்கள். இதில் இருவரும் லிவ்விங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுலின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த வீட்டில் சிறப்பான பர்த்டே பாட்டியும் நடைபெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

சுனில் ஷெட்டி அளித்த பதில்:

இந்த வாடகை வீட்டுக்கு ஒரு மாதத்திற்கு 10 லட்சம் ரூபாயும், கடற்கரை நோக்கி பார்த்து போல பாந்திராவில் உள்ள சாலையில் அந்த வீடு அமைந்துள்ளது. மேலும், திருமணமாகாமல் மகள் இப்படி கிரிக்கெட் வீரருடன் வாழ்ந்து வருவது குறித்து ரசிகர்கள் சுனில் ஷெட்டியிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். இதற்கு சுனில் ஷெட்டி கூறி இருப்பது, எனக்கும் என் மனைவிக்கும் இதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. மகள் சந்தோஷம் தான் எங்களுக்கு முக்கியம். அவர்கள் திருமணத்திற்கு எப்போது தயாராகி வருகிறார்களோ? அப்போது திருமணம் செய்து வைக்க முடிவு செய்து இருக்கிறோம் என்று கூறி இருக்கிறார்.

Advertisement