தெலுங்கு சினிமா உலகில் ஸ்டைலிஷ் ஸ்டார் ஆக கலக்கி கொண்டிருப்பவர் அல்லு அர்ஜுன். தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் புஷ்பா. இந்த படத்தை சுகுமார் இயக்கி வருகிறார். இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. மேலும், இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படம் செம்மரக் கடத்தலை மையமாக வைத்து உருவாகி வருகிறது. படத்தில் அல்லு அர்ஜுன் அவர்கள் லாரி டிரைவராக நடிக்கிறார். இந்த படத்தில் வில்லனாக பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் நடிக்கிறார்.
மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளிவர உள்ளது. இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் எல்லாம் செம வரவேற்பை பெற்றது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் நடிக்கும் பிரபல நடிகர் சுனிலின் ஸ்பெஷல் போஸ்டர் ஒன்று சமீபத்தில் வெளியாகி இருக்கிறது.
இதையும் பாருங்க : வசூல் வேட்டை நடத்திய டாக்டர் – சம்பளத்தை உயர்த்திய சிவகார்த்திகேயன் ? எத்தனை கோடி தெரியுமா ?
அதில் அடையாளம் தெரியாத அளவு படு வித்யாசமான கெட்டப்பில் இருக்கிறார் சுனில். சுனில் வேறு யாரும் இல்லை தெலுங்கு சினிமாவில் காமெடியான அறிமுகமாகி தற்போது ஹீரோவாக நடித்து வரும் நடிகர் தான். ஆரம்பத்தில் இவருடைய நகைச்சுவை பேச்சுக்கும், திறமைக்கும் சினிமாவில் பட வாய்ப்புகள் வந்தது. அது மட்டும் இல்லாமல் தெலுங்கு சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடிகர் சுனில் வர்மா நடித்து உள்ளார்.
டோலிவுட்டில் மிகப் பிரபலமான காமெடி நடிகராக இருந்த சுனில் அவர்கள் அந்தால ராமுடு என்ற திரைப்படத்தின் மூலம் தான் முதன் முறையாக கதாநாயகனாக நடித்தார். பிறகு 2010 ஆம் ஆண்டு இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலியின் மரியாத ராமன்னா என்ற திரைப்படத்திலும் ஹீரோவாக நடித்து உள்ளார். தமிழில் சந்தானம் எப்படியோ அப்படி தான் தெலுங்கு சினிமா துறையில் சுனில்.