மீண்டும் சூர்யா பற்றி பேசிய சன் ம்யூசிக் தொகுப்பாளினி ! என்ன சொன்னார் தெரியுமா ?

0
5060
Actor surya

சில மாதங்களுக்கு முன்னர் சூர்யா நடித்து மெகா ஹிட்டான தானா சேர்ந்த கூட்டம் வெளியான போது நடிகர் சூர்யாவின் உயரத்தை பிரபல சன் மியூசிக் தொகுபாளினிகள் சங்கீதா மற்றும் நிவேதிதா பொது நிகழ்ச்சியில் கிண்டல் செய்தனர்.இதனால் சூர்யாவின் ரசிகர்களும்,சினிமா பிரபலங்களும் அந்த இரண்டு தொகுப்பாளினிகளுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தனர். மேலும் சூர்யாவின் ரசிகர்கள் அந்த இரண்டு பேரையும் எதிர்த்து போராட்டங்களை கூட நடத்தினர்.

sangeetha vj

- Advertisement -

சினிமாவில் தனது கடின உழைப்பால் இந்த இடத்திற்கு வந்த சூர்யாவை அவரின் உருவ அமைப்பை வைத்து கிண்டல் செய்தது மக்கள் மத்தியில் சற்று சர்ச்சையை ஏற்படத்தியது.

இந்நிலையில் அந்த இரண்டு தொகுப்பாளினிகளில் ஒருவரான நிவேதிதா சமீபத்தில் சூர்யா பற்றி மீண்டும் பேசியுள்ளார் அதில் எனக்கு சூர்யா என்றால் மிகவும் பிடிக்கும் சிறு வயதிலிருந்தே நான் அவருடைய ரசிகை அவர் நடித்த எல்லா படங்களிளும் எந்த விதமான கதாபாத்திரமாக இருந்தாலும் அதனை சிறப்பாக செய்வார்.

-விளம்பரம்-

ட்விட்டரில் கூட நடிகர் சூர்யாவை பற்றி நான் அடிக்கடி நல்லவிதமாக தான் பதிவிட்டுள்ளேன் அந்த அளவிற்கு சூர்யாவை எனக்கு பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement