குழந்தை வளர்ப்பு, தாய்மை பற்றி நடிகை சன்னி லியோன் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹாலிவுட்டில் பாலியல் ஆபாச படங்களில் நடித்து பின்னர் திரைப்படங்களில் முன்னணி நடிகையாக மாறியவர் நடிகை சன்னி லியோன். இவர் பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்தவர். இவர் கனடாவில் பிறந்து வளர்ந்தவர். ஆரம்பத்தில் இவர் கனடாவில் மாடலிங் துறையில் தான் இருந்தார்.

அதற்குப்பின் நடிக்க வந்தார். அதற்குப் பின் இவர் இந்தியாவிற்கு குடி பெயர்ந்தார். குடி பெயர்ந்த பிறகு படங்களில் கவனம் செலுத்தி வந்தார். 2011 ஆம் ஆண்டு இவர் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதனை தொடர்ந்து இவர் பாலிவுட்டில் பிரபலமான ஹீரோயின் ஆனார். தற்போது இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என்று பல படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையே சன்னி லியோன் அவர்கள் டேனியல் வெபர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
சன்னி லியோன் குறித்த தகவல்:
2017 ஆம் ஆண்டு நிஷா கௌர் வெபர் என்ற மகளை தத்து எடுத்தார். இதை அடுத்து 2019 ஆம் ஆண்டு நோவா, ஆஷர் இரட்டை ஆண் குழந்தைகளை சரோசி முறையில் பெற்றுக் கொண்டார்கள். சினிமாவில் பிரபலமான நடிகையாக சன்னிலியோன் வலம் வந்தாலும் குடும்பத்தின் மீதும் அக்கறை செலுத்தி வருகிறார். தற்போது இவர் குழந்தைகள் தான் தன்னுடைய உலகம் என்று வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் குழந்தை வளர்ப்பு தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் சன்னிலியோன், எனக்கு 38 வயதில் தான் திருமணம் ஆனது.

சன்னி லியோன் பேட்டி:
நான் என்னுடைய வாழ்க்கையை ஆரம்பித்தபோது எனக்கு குழந்தைகளை பெற்றுக் கொள்ளும் ஆசை இருந்தது. 6-10 மாதங்கள் இயற்கையாகவே குழந்தைகள் பெற்றுக்கொள்ள முயற்சி செய்தோம். ஆனால், நான் கர்ப்பமான போது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு எந்தவித வளர்ச்சியும் இல்லை. குழந்தை பெற்றுக்கொள்வது கஷ்டம் என்று மருத்துவர்கள் சொன்னார்கள். செயற்கை முறையில் கருத்தரித்தல் போன்ற பல முயற்சிகளை செய்து பார்த்தோம். ஆனாலுமே பலன் இல்லை.

குழந்தை பற்றி சொன்னது:
கடவுள் எனக்கு குழந்தை பெறும் வாய்ப்பை கொடுக்கவில்லை என்று ரொம்ப வருத்தப்பட்டேன். ஆனால், அப்போது தான் நாம் ஏன் குழந்தைகளை தத்து எடுத்து வளர்க்கக்கூடாது என்று யோசனை வந்தது. நிஷா எங்களுக்கு மகளால் கிடைத்தார். அதற்கு பிறகு தான் சரோகசி முறையில் நாங்கள் நோவா, ஆஷர் என்ற இரட்டை குழந்தைகளை பெற்று எடுத்தோம். கடவுள் எங்களை மிகவும் நேசிக்கிறார் என்று இப்போது உணர்கிறேன் என்று கூறியிருக்கிறார்.






